மாம்சீக கிறிஸ்தவர்களும், ஆவிக்குறிய கிறிஸ்தவர்களும்

மாம்சீக கிறிஸ்தவர்களும், ஆவிக்குறிய கிறிஸ்தவர்களும்

“பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?” – 1 கொரி 3:3

இரண்டு வகையான கிறிஸ்தவர்கள் உண்டு. அதில் நீங்கள் யாராக இருப்பீர்களென்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மாம்சீக கிறிஸ்தவர்களாக இருப்பீர்களா அல்லது ஆவிக்குறிய கிறிஸ்தவர்களாக இருப்பீர்களா?

மாம்ச கிறிஸ்தவனானவன் மனுஷரைப் பிரியப்படுத்துபவன், தேவனுக்கு கீழ்படிவதைக் காட்டிலும் மனுஷர் என்ன நினைப்பார்கள் என்று அதிகமாக கவலைப்படுபவன். அவர்கள் முதிர்ச்சியற்றவர்கள். தங்கள் உணர்ச்சிகளால் செயல்படுபவர்கள். அவர்களுக்கு தோன்றுவதைப் போன்று பேசுவார்கள், செய்வார்கள். அவர்கள் பொதுவாக சண்டையிலும், அதிருப்தியிலும் சுலபமாக மனக்காயமடைந்தும், சமாதானம் இழந்தும் காணப்படுவார்கள்.

ஒரு ஆவிக்குறிய கிறிஸ்தவனே, பரிசுத்த ஆவியானவரின் விருப்பங்களை ஜாக்கிரதையாய் பின்பற்றுகிறவன். அவர்கள் தங்கள் ஆவியை அனுதினமும் வார்த்தையால் போஷிப்பார்கள். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனை அனுமதிப்பார்கள். வாரத்தில் ஒருமுறை மட்டுமன்றி, ஒவ்வொரு நாளிலும் தேவனுடனான அவர்களது உறவே அவர்கள் வாழ்வின் நோக்கமாக கொண்டிருப்பார்கள்.

ஏற்கனவே நீங்கள் செய்திராதிருந்தால், இன்று கிறிஸ்துவை முழு நேரமாக பின்பற்ற அர்ப்பணம் செய்யுங்கள் என்று உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் செய்யும் அனைத்திலும் தேவனை அனுமதியுங்கள். அன்பிலே, உத்தமத்திலே, தாழ்மையிலே, சமாதானத்திலே நடங்கள். பிறருடன் ஒத்துச் செல்லுங்கள். ஆவியின் கனியை வெளிப்படுத்தி தேவனுடைய தயவை அனுபவியுங்கள்.


ஜெபம்

தேவனே, நான் எப்போதுமே மாம்சத்தில் நடத்தப்படும் ஒரு மாம்சீக கிறிஸ்தவளாக இருக்க விரும்பவில்லை. மாறாக நான் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டு உம்மை பிரியப்படுத்தும் ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நான் ஒரு மாம்சீக கிறிஸ்தவனாக அல்ல, ஆவிக்குறிய கிறிஸ்தவனாக இருக்க இன்றே தெரிந்து கொள்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon