வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 12:10)
பொது ஆராதனையில் ஒருவர் அந்நிய பாஷைகளில் பேசும் போது, 1 கொரிந்தியர் 14:27ன் படி, அதன் விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். எனக்கு சில சமயங்களில் அந்நியபாஷைகளில் கொடுக்கப்பட்ட செய்திகளின் புரிதல் அல்லது விளக்கங்கள் கிடைத்திருக்கிறது. கேட்பவர்களுக்குக், கடவுள் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு அபிப்ராயமாக அல்லது என் ஆவியில் உணர்த்துபவையாக அவை என்னிடம் வருகின்றன.
கிறிஸ்த்தவத்தின் பல பிரிவுகளுக்கு, இப்படிப்பட்ட விஷயங்கள் ஒரு மர்மமாக இருக்கின்றன. ஏனென்றால் அவர்களுக்கு, அவற்றைப் பற்றிய போதனைகள் இல்லை. நாம் கடினமான காலங்களில் வாழ்கிறோம் என்றும், கடவுளிடமிருந்து நாம் பெறக்கூடிய இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்து உதவியும் நமக்குத் தேவை என்றும் நான் நம்புகிறேன். ஏமாறாமல் இருப்பது முக்கியம். ஆனால் கடவுளின் வரங்கள் என்று நாம் ஏமாற்றப்படுவோம் என்று பயப்படாமல் இருப்பதும் முக்கியம்.
பவுல் விசுவாசிகளை அந்நிய பாஷைகளில் ஜெபிக்கவும், அதற்கு விளக்கம் கொடுப்பதற்காக ஜெபிக்கவும் அவர்களை ஊக்குவித்தார். நாமும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
வியாக்கியானம் என்ற வரம் இருப்பதால், நம்முடைய தனிப்பட்ட பிரார்த்தனை மொழியைப் பயன்படுத்தும் போது நாம் என்ன ஜெபிக்கிறோம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. மொழிபெயர்ப்பு வேறு, விளக்கம் கொடுப்பது வேறு. நாம், வார்த்தைக்கு வார்த்தை புரிதலைப் பெறுவதில்லை. ஆனால் கடவுள் தம் மக்களிடம் என்ன பேசுகிறார் என்பதைப் பற்றிய பொதுவான உணர்வைப் பெறுகிறோம்.
கடவுள் ஆவியாயிருக்கிறார் மற்றும் நாமும் ஆவிக்குறிய மனிதர்கள். கடவுள் நமக்கு என்ன சொல்கிறார் என்பதை நம் ஆவியில் உணர நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த விஷயங்களை நீங்களே படிக்கவும், அவருடைய அற்புதமான வரங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளும்படி கடவுளிடம் கேட்கவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். முக்கியமான காரியம் என்னவென்றால், நீங்கள் திறந்த மனதுடன் ஜெபித்து, கடவுளைத் தேடும் போது பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: தைரியமாக இருங்கள் மற்றும் அவருடைய இரகசியங்களையும், மர்மங்களையும் புரிந்துகொள்ள உங்களை வழிநடத்தும்படி கடவுளிடம் கேளுங்கள்.