
எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும். (1 கொரிந்தியர் 12:8)
அறிவின் வார்த்தை ஞானத்தின் வார்த்தையைப் போலவே செயல்படுகிறது. அறிவு என்ற சொல்லுக்குப் பலவிதமான விளக்கங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட சூழ்னிலையில் என்ன செய்வது என்பதைப் பற்றிய அறிவை ஒருவர் இயற்கையாக பெற்றிராத போது, கடவுள் அதை அவருக்கு வெளிப்படுத்துகிறார். அப்பொழுது அது செயல்படுகிறது என்று பலர் ஒப்புக்கொள்கின்றனர்.
சில சமயங்களில் கடவுள் நம்மிடம் பேசும்போது, மற்றவர்களைப் பற்றிய அறிவை நமக்குத் தரும்போது, அவர்களிடம் ஏதோ தவறு இருப்பதாக நமக்குத் தெரியும். அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியும். இந்த மாதிரியான அமானுஷ்ய அறிவை நாம் யாரிடமும் திணிக்க முயற்சிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நாம் அதை மனத்தாழ்மையுடன் முன்வைத்து, கடவுளை நம்ப வைக்க அனுமதிக்க வேண்டும். சில சமயங்களில் நாம் செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புவதெல்லாம் தனிநபருக்காக ஜெபிப்பதுதான்.
அறிவின் வார்த்தை, பெரும்பாலும் மற்றவர்களுக்கு உதவ ஒரு ஊழிய கருவியாக கொடுக்கப்பட்டாலும், அது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் மதிப்புமிக்கது. எடுத்துக்காட்டாக, நான் எதையாவது தொலைத்துவிட்டாலோ அல்லது தவறாக வேறு இடத்தில் வைத்து விட்டாலோ, இந்த வரம் செயல்படுகிறது. நான் தேடுவதை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை, திடீரென்று பரிசுத்த ஆவியானவர் எனக்கு ஒரு மன உருவத்தையோ, ஒரு யோசனையையோ அல்லது அது எங்கே இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு வார்த்தையையோ தருகிறார். என்னிடம் இயல்பாக இல்லாத அறிவை அவர் எனக்கு வழங்குவதற்கு, இது ஒரு நடைமுறை உதாரணம். அறிவின் வார்த்தை உங்கள் வாழ்க்கையிலும் செயல்பட முடியும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கல்வி நல்லது, ஆனால் கடவுளின் அறிவு இன்னும் சிறந்தது, எனவே அவரை சார்ந்து இருங்கள்.