வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 12:10)
ஆவிகளைப் பகுத்தறிவது மிகவும் மதிப்புமிக்க வரம் என்று நான் நம்புகிறேன். மேலும் அதை விரும்பி வளர்த்துக் கொள்ள உங்களை ஊக்குவிக்கிறேன். ஆவிகளைப் பற்றிய பகுத்தறிதல், கடவுள் அனுமதிக்கும் போது, ஆவிக்குறிய மண்டலத்தைப் பற்றிய இயற்கைக்கு அப்பாற்பட்ட பார்வையை, மக்களுக்கு அளிக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆவிகளைப் பகுத்தறிவது என்பது, ஒரு நபரின் அல்லது சூழ்நிலையின் உண்மையான தன்மையை அறிந்துகொள்ள கொடுக்கப்பட்ட வரம் என்றும் பலர் நம்புகிறார்கள். நம் உலகம் ஏமாற்றத்தால் நிரம்பியுள்ளது மற்றும் பலர் அவர்கள் தோற்றமளிக்கும் விதத்தில் இருப்பதில்லை. ஆவிகளைப் பகுத்தறியும் வரம், மக்களை அவர்கள் அணியும் முகமூடிகளைத் தாண்டி பார்க்க உதவுகிறது. இதன் மூலம் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். ஏதாவது ஒரு நல்ல விஷயம் அல்லது ஒரு நபருக்கு நல்ல இருதயம் இருந்தால், அதையும் அறிந்து கொள்ள இந்த வரம் நமக்கு உதவுகிறது.
எங்கள் ஊழியத்தில் வேலை செய்ய ஆட்களை வேலைக்கு அமர்த்தும் போது இந்த வரம் செயல்படுவதை நானும் டேவும் பலமுறை பார்த்திருக்கிறோம். பல நேரங்களில், மக்கள் தாங்கள் விண்ணப்பித்த வேலைகளுக்குத் தகுதி, திறமை, அர்ப்பணிப்பு மற்றும் “சரியானவர்கள்” என்று தோன்றியிருக்கிறார்கள். நாங்கள் ஒருவரைச் சந்தித்த ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பம் எனக்கு நினைவிருக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவரும் அவரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது என்று என் இருதயத்தில் ஒரு எச்சரிப்பு உணர்வு இருந்தது. அப்படியும் நாங்கள் அவரை வேலைக்கு அமர்த்தினோம். அவர் சிக்கலை உருவாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. நான் என் பகுத்தறிவை அனுமதித்தேன்-அவர் நன்றாக செயல்படுவார் என்று நினைத்து, அவருடைய பயோடேட்டாவை நாங்கள் விரும்பினோம் தான்-எனது பகுத்தறிவை முந்திக்கொள்ள, நான் விரும்பவில்லை.
தேவனுடைய ஆவியானவர் நம் இருதயங்களில் வாழ்கிறார். நம் இருதயங்களோடு பேசுகிறார், நம் தலையுடன் அல்ல. அவருடைய வரங்கள் அறிவை சார்ந்தவை அல்ல அல்லது நம் மனதிலும் செயல்படுவதில்லை; அவை ஆவிக்குறியவைகள் எனவே அவை நம் ஆவியில் செயல்படுகின்றன. நாம் நம் ஆவியில் உணர்வதைப் பின்பற்ற வேண்டும், நம் மனதில் சரியாக தோன்றுவதை அல்ல. இதனால்தான் கடவுள் நமக்கு பகுத்தறிவைத் தருகிறார்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் மற்றும் நினைப்பதை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்காதீர்கள்.