இந்த வழியே சிறந்தது

இந்த வழியே சிறந்தது

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். (யோவான் 16:7)

நம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் பிரசன்னம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அற்புதமானது. அவர் நமக்கு ஆறுதல் அளிப்பவர், அதாவது நாம் வாழ்க்கையில் பயணிக்கும்போது நாம் காயப்படும் போது அவர் நமக்கு உதவுவார், ஆறுதல்படுத்துவார். என்னுடைய அடுத்த மூச்சு போல பரிசுத்த ஆவியானவர் எனக்கு அருகில் இருப்பதாக நினைக்க விரும்புகிறேன்.

பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கைக்கான கடவுளின் திட்டத்தில் நம்மை வழிநடத்துகிறார். அவருடைய தலைமையைப் பின்பற்றக் கற்றுக் கொள்வது நிச்சயமாக ஒரு பயணம். நாம் நம்முடைய சொந்த எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் ஆசைகளின்படி வாழப் பழகிவிட்டோம். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட கற்றுக் கொள்ள வேண்டும். இயேசு சரீரத்தில் வந்தார். வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் அனைத்தையும் புரிந்துகொள்கிறார். இயேசு என்னைப் புரிந்துகொண்டார் என்பதை நினைவில் கொள்வது எனக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது! அவர் பொறுமையாக இருக்கிறார். நாம் தொடர்ந்து கற்கத் தயாராக இருக்கும் வரை நம்முடன் தொடர்ந்து பணியாற்றுவார்.

இயேசு, தான் போய் பரிசுத்த ஆவியை அனுப்பினால் நல்லது என்று ஏன் சொன்னார்? பூமியில் இயேசுவை நேரில் வைத்திருப்பதை விட சிறந்தது எதுவாக இருக்க முடியும்? இயேசு ஒரு நேரத்தில் ஒரே இடத்தில் மட்டுமே இருக்க முடியும், ஆனால் பரிசுத்த ஆவியானவர் எல்லா இடங்களிலும் இருக்க முடியும். எல்லாரிடமும் ஒரே நேரத்தில் வேலை செய்கிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது!

அவர் ஒரு கணம் கூட நம்மை விட்டு விலகுவதில்லை. அவர் நம்மைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், மேலும் நம்மில் உடைந்த அல்லது காயம்பட்ட அனைத்தையும் குணப்படுத்தவும், எல்லாவற்றையும் அதன் சரியான செயல்பாட்டில் வைக்கவும் செயல்படுகிறார். பரிசுத்த ஆவியின் அற்புதமான வல்லமை மற்றும் ஞானத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு விதத்திலும் சிறந்து விளங்குகிறோம்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பரிசுத்த ஆவியானவர் உங்களை, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அப்படி உருவாக்கும்படி கேளுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon