உங்கள் அன்றாட வாழ்வில் எல்லா நேர நண்பர்

உங்கள் அன்றாட வாழ்வில் எல்லா நேர நண்பர்

அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார். (சங்கீதம் 55:17)

தேவனுடன் உங்கள் நட்பை வளர்த்துக் கொள்வது, பூமியில் உள்ள ஒருவருடன் நட்பை வளர்ப்பதற்கு ஒப்பானது. அதற்கு சிறிது காலமாகும். உண்மை என்னவென்றால், நீங்கள் விரும்பும் அளவிற்கு, அவருடன் நெருக்கமாக இருக்க முடியும்; அவருடனான உங்கள் உறவு, நீங்கள் அவருடன் செலவு செய்ய விரும்பும் நேரத்தைப் பொறுத்தது. ஜெபத்திலும், அவருடைய வார்த்தையிலும் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் அவரைத் தெரிந்துகொள்ள உங்களை ஊக்குவிக்கிறேன். காலப்போக்கில் நீங்கள் அவருடன் நடக்கும்போதும், அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்கும் போதும் அவருடனான உங்கள் நட்பு, ஆழமாக வளரும். தேவனுடன் ஒரு நண்பராக உறவை வளர்ப்பதற்கும், மக்களுடன் உறவை வளர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அவர் நல்லவர்! உங்களை ஒருபோதும் கைவிடாதவர், கைவிடமாட்டார். உண்மையானவர், நம்பகமானவர், அன்பானவர், மன்னிப்பவர். அப்படிப்பட்டவருடன் நீங்கள் ஐக்கியத்தை வைத்துக் கொள்கிறீர்கள்.

தேவனுடன் ஒரு சிறந்த நட்பை வளர்த்துக் கொள்வதற்கும், ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு முக்கிய அங்கமாக அவர் இருக்கும்படி அவரை அழைப்பதற்கும் முன்னுரிமை கொடுங்கள். உங்கள் எண்ணங்களிலும், உரையாடல்களிலும், உங்கள் அன்றாட நடவடிக்கைகளிலும் அவரைச் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அத்தியாவசிய தேவை இருக்கும் போது மட்டும் அவரை தேடி ஓடாதீர்கள்; மளிகைக் கடையில் அவருடன் பேசுங்கள், நீங்கள் உங்கள் காரை ஓட்டும்போது, உங்கள் தலைமுடியை சீவும் போது, உங்கள் நாயுடன் நடக்கும்போது அல்லது இரவு உணவு சமைக்கும்போதும் அவ்ருடன் பேசுங்கள். உங்கள் கூட்டாளியாகவும், நண்பராகவும் அவரை அணுகவும், அவர் இல்லாமல் எதையும் செய்ய மறுக்கவும். அவர் உண்மையில் உங்கள் வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறார்! ஞாயிறு-காலை பெட்டியில் இருந்து கடவுளை வெளியே விடுங்கள், அப்படி பலர் அவரை உள்ளே வைத்திருக்கிறார்கள், மேலும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்க முழுவதும் அவர் உங்களுடன் இருக்கட்டும். அவரை ஒரு மதப் பிரிவில் வைக்க முயற்சிக்காதீர்கள், ஏனென்றால் அவர் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிரியை செய்ய விரும்புகிறார். அவர் உங்கள் நண்பராக இருக்க விரும்புகிறார்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்கள் ஆண்டவர், ஆனால் அவர் உங்கள் நண்பராகவும் இருக்க விரும்புகிறார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon