உங்கள் உணர்ச்சிகளை கையாளுங்கள்

“உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார் (மகிழ்வுடன் பாடுவார்).” – செப் 3:17

உணர்ச்சிகளை கையாளுதலானது வாழ்வின் நிதர்சனமாகும். நாம் உயிருடன் வாழும் வரை பலவிதமான உணர்ச்சிகளையும், பிரதி கிரியைகளையும் அனுபவிப்போம். அப்படி அவை இருப்பதை நாம் மறுக்கக் கூடாது. அப்படி இருப்பதால் நாம் குற்ற உணர்வடையவும் கூடாது. ஆயினும் நாம் நம் உணர்ச்சிகளை கையாளுவதை கற்றுக் கொள்ள வேண்டும். நாம் நம் உணர்ச்சிகளை நம்ப முடியாது என்பதை விளங்கிக் கொள்ளும் போது அது சுலபமாகி விடுகிறது. உண்மையிலேயே நமக்கு அவை மிகப்பெரிய எதிரியாக இருக்கக்கூடும். நாம் ஆவியிலே நடவாதிருக்கும் படி செய்ய சாத்தான் நம் உணர்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ளுகிறான்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாசம் பண்ணும் நம் தேவனாகிய கர்த்தர் வல்லமை மிக்கவராக இருக்கிறார். நம்க்குள் இருக்கும் அவரது பராக்கிரமமானது நம் உணர்ச்சிகளை நாம் மேற்கொள்ள பெலனளித்து அவரது மாறாத வார்த்தையாலும், ஆவியாலும் நடத்தப்பட உதவி செய்கிறது.

ஆவிக்குறிய உறுதியும், உணர்ச்சி ரீதியான முதிர்ச்சியும் தானாக ஏற்படுகிறதில்லை. உங்களுடைய முழு இருதயத்தோடும், அதை வாஞ்சித்து அதை பெற்றுக் கொள்ள உறுதியாக இருக்க வேண்டும். உணர்ச்சியில் நிலையாக இருப்பதை உங்கள் முதலுரிமையாக்கிக் கொள்ளும் போது உங்கள் உணர்ச்சிகளை கையாள உங்களுக்கு உதவ தேவன் மிகுந்த விருப்பமுள்ளவராக இருக்கிறார்.

இன்று அதை நீங்கள் தொடர உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நிலையான உணர்ச்சியையும், சந்தோசமான வெற்றியுள்ள வாழ்க்கையையும் அனுபவிப்பீர்களாக!

ஜெபம்

தேவனே, நிலையான உணர்ச்சியை பின்தொடர்வதை தெரிந்து கொள்ளுகிறேன். என்னுடைய உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படாமல், அவற்றை சரியாக சமாளிக்க கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனக்குள்ளே வாழ்வதற்காகவும் உமது பராக்கிரமத்தால் எனக்கு உதவுகிறதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon