“கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.” – பிலி 4:8
நான் மகிழ்ச்சியற்றவளாக பல வருடங்கள் கழித்தேன். ஏனென்றால் நான் காலையில் எழுந்ததிலிருந்து எதிர்மறை, சோகம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் விஷயங்களையே சிந்திக்க ஆரம்பித்தேன். இப்போது நான் முழு திருப்தியடைந்தவளாக இருக்கிறேன் என்று சொல்ல முடியும். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளாக இருக்கும் கிறிஸ்துவின் சிந்தையோடு எப்படி நடந்து கொள்வது என்பதை கற்றுக் கொள்ள உதவினார்.
ஒருவேளை, என்னைப் போலவே, நீங்கள் தவறான எண்ணங்களை சிந்தித்து பல ஆண்டுகள் கழித்திருக்கலாம். நற்செய்தி என்னவென்றால், கடவுளின் உதவியுடன், இன்றே அது மாறக்கூடும். நீங்கள் எதிர்மறையான சிந்தனையுடன் போராடுகிறீர்களானால், உங்கள் சிந்தனை மாறும் வரை உங்கள் வாழ்க்கை மாறாது என்ற உண்மையை நீங்கள் பிடித்துக் கொள்வது அவசியம். புதுப்பிக்கப்பட்ட, தேவனைப் போன்ற சிந்தனைகள், மாற்றத்திற்கு இன்றியமையாதது.
நாம் எந்த வகையான விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதைப் பற்றி வேதத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன. பிலிப்பியர் 4:8, நம்மைக் கட்டியெழுப்பும் விஷயங்களைப் பற்றியே சிந்திக்கச் சொல்கிறது.
நான் இன்று உங்களுக்கு சவால் விட விரும்புகிறேன். காலையில் எழுந்து உடனடியாக எதிர்மறை எண்ணங்களை சிந்திப்பதற்கு பதிலாக, வேதத்திலிருந்து ஒரு நேர்மறையான உண்மையைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்திருக்கும்போது அதில் கவனம் செலுத்துங்கள். கடவுளுடைய வார்த்தை உங்களில் வளர்ந்து உங்கள் மனதை மாற்றட்டும். நல்ல விஷயங்களில் உங்கள் மனதை வைத்து, அது கொண்டு வரும் தெய்வீக மாற்றங்களை அனுபவிக்கவும்.
ஜெபம்
தேவனே, நான் மாறவும், கிறிஸ்துவின் சிந்தையோடு வாழவும் தயாராக இருக்கிறேன். உண்மையான, தூய்மையான, அழகான, கனிவான, கிருபையான, நல்லொழுக்கமான உம்மால் உண்டான ஒன்றைப் பற்றி மட்டுமே சிந்திக்க எனக்கு உதவும்.