உங்கள் நாவை கட்டுப்படுத்துதல்

தேவனை மகிமைப்படுத்த முக்கியமான வழி நம் நாவை கட்டுப்படுத்துவதாகும். – சங்கீதம் 50:23

தேவனை மகிமைப்படுத்த முக்கியமான வழி நம் நாவை கட்டுப்படுத்துவதாகும். சங்கீதம் 50:23 சொல்வதாவது: “ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.”

உங்கள் உதடுகளில் இருந்து ஒவ்வொரு நாளும் தேவனுக்கேற்ற வார்த்தைகள் மட்டுமே வரும்படி உங்கள் வாயை தேவனுக்கு கொடுப்பீர்கள் என்றால் எப்படி இருக்கும்? நான், உங்களுடைய அமைதி நேரத்தில் தேவனை துதித்து, அவருக்கு நன்றி செலுத்துவதையோ அல்லது உங்கள் மேல் நேர்மறையான ஊக்கமளிக்கும் வார்த்தைகளை கூறுவதைப் பற்றி மட்டும் பேசவில்லை. உங்கள் உறவுகளின் ஆரோக்கியம், நீங்கள் பிறரிடம் எப்படி பேசுகிறீர்கள்,  எப்படி பிறரைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதை சார்ந்திருக்கிறது.

சங்கீதம் 34:13,  நீங்கள் உங்கள் நாவை எல்லாத்துக்கும்,  உங்கள் உதடுகளை வஞ்சகம் பேசுவதிலிருந்து விலக்க வேண்டும் என்று சொல்கிறது. நீங்கள் பிறரிடம் பொய் சொல்கிறீர்களா? நீங்கள் அவர்கள் மனம் நோகும்படி பேசுகிறீர்களா?  அல்லது அவர்களைப் பற்றி தவறாக பேசுகின்றீர்களா? அல்லது நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும் ஊக்கமளித்து, சந்தோஷத்தை கொண்டு வரும்,  வாழ்வு தரும் வார்த்தையை பேசுகிறீர்களா?

உங்கள் வாயை தேவனுக்கு அர்பணித்து,  அவருக்கு பிரியமாக இருக்கும் துதி, ஆராதனை,  பக்தி விருத்தியாகும் காரியங்கள், உற்சாகப்படுத்துதல், நன்றி செலுத்துதல் போன்ற காரியங்களுக்காக உபயோகிக்கிறீர்களா?  ஒவ்வொருநாள் காலையிலும் உங்கள் உதடுகளை பலிபீடத்தின்மேல் வையுங்கள்.  அவரது வார்த்தையாகிய  சங்கீதம் 51:15 ஐ ஜெபத்தின் மூலம் உங்கள் வாயை தேவனிடம் கொடுத்துவிடுங்கள்.

ஜெபம்

தேவனே, என்னுடைய உதடுகளை திறந்தருள்வீராக.  அப்போது என் வாய் உம்மை துதித்து,  நன்றி ஏறெடுக்கும். என்னை சுற்றி இருப்பவர்களுக்கு சந்தோசத்தையும், உம்மைத் துதித்து மகிமைப்படுத்தும் என் வார்த்தைகளை உபயோகிக்கவும் எனக்கு உதவுவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon