முதலில் தேவனிடம் செல்லுங்கள்

முதலில் தேவனிடம் செல்லுங்கள்

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். (சங்கீதம் 91:15)

ஒரு சமயம், என்னுடைய பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்னை மிகவும் புண்படுத்தும் காரியத்தைச் செய்தார், அதன் விளைவாக நான் நிராகரிக்கப்பட்டதாக உணர்ந்தேன். அப்படி நடந்த பிறகு, நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, காரில் அமர்ந்திருந்தேன், நான் சொன்னேன், “தேவனே, நீர் என்னை ஆறுதல்படுத்த வேண்டும். நான் இப்படி உணர விரும்பவில்லை. நான் கசப்பு அடையவோ அல்லது வெறுப்பை வளர்க்கவோ விரும்பவில்லை. இவரிடமிருந்து இதே போன்ற வலியை நான் இதற்கு முன்பு அனுபவித்திருக்கிறேன், இதனால் எனது நாள் அழிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஆனால் அதைக் கையாள்வதில் எனக்கு சிக்கல் உள்ளது, உம்முடைய உதவியை நான் பெற வேண்டும், என்று.”

என்ன நடந்தது தெரியுமா? தேவன் அந்த வலியை எடுத்துப் போட்டார், என் கெட்ட உணர்வுகள் அனைத்தும் நீங்கின! ஆனால் நாம், எத்தனை முறை, ஜெபத்தில் அவரிடம் திரும்புவதற்குப் பதிலாக, மற்றவர்களிடம் திரும்புகிறோம், என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர்களிடம் சொல்வது நமக்கு ஆறுதலளிக்கும் என்று தவறாக நினைத்துக் கொள்கிறோம், ஆனால் அது இல்லை. உண்மை என்னவென்றால், நம்மைப் புண்படுத்தும் விஷயத்தைப் பற்றி பேசுவது நம் உணர்ச்சிகளில் வலியை அதிகப்படுத்துகிறது மற்றும் அதைக் கடப்பதை மிகவும் கடினமாக்குகிறது. தேவனிடம் திரும்புவதற்கு முன்பு நாம் நினைக்கும் அனைத்தையும் செய்ய முனைகிறோம், அது எதுவும் நிலைமையை மாற்றாது. ஒவ்வொரு அவசர நிலை மற்றும் ஒவ்வொரு வகையான கஷ்டத்திலும், நம்முடைய முதல் பதில் ஜெபம் என்றிருந்தால் நாம் மிகவும் சிறப்பாக இருப்போம். நாம் முழுவதுமாக கடவுளைச் சார்ந்து இருந்தால், யாரையும் அல்லது எதையும் விட அவர் நமக்குத் தேவை என்பதை அவருக்குத் தெரியப்படுத்தினால், நம் வாழ்வில் பெரும் முன்னேற்றங்களை அனுபவிப்போம்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளை உங்களின் “முதல் பதிலளிப்பவராக” ஆக்குங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon