“ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.” – ரோமர் 12:16
அன்பின் முக்கியமான அம்சங்களில் ஒன்று சுயநலமின்மை. தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள மனமுவந்தும், பிறருடைய தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வதே சுயநலமின்மை என்பதாக ரோமர் 12:16, அதன் தன்மையை விவரிக்கிறது.
இந்த வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டு அதனை தங்கள் வாழ்க்கையிலே பொருத்திக் கொண்டவர்கள் தங்களை வெறுமையாக்கி, உருக்கி நேசிப்பது என்றால் என்ன என்பதை கற்றிருக்கின்றனர். அவர்கள் சுயநலமாக இருப்பதில்லை. அவர்கள் தங்களை மாற்றி அமைத்து பிறருடன் தங்களை பொருத்திக் கொள்வதை கற்று இருக்கின்றனர்.
மாறாக, தங்களைப் பற்றி நினைக்க வேண்டியதற்கும் மேலாக உயர்வாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு, பிறருடன் பொருந்திக் கொள்வது கஷ்டமாக இருக்கும். தங்களைப் பற்றி அவர்களது உயர்வான எண்ணமானது பிறரை ‘சிறியவர்களாகவும்’ முக்கிய மற்றவர்களைப் போன்றும் பார்க்க செய்துவிடும். பிறர் அவர்களுடன் பொருந்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் சுயநலத்துடன் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் கோபப்படாமல் பிறருடன் பொருந்திக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள்.
நீங்கள் எத்தகையவர்? நான் முன்பு சுயநலக்காரியாக இருந்ததுண்டு. காலியாக இருந்தது உண்டு ஆனால் இப்போது ஒரு சுயநலமற்ற வாழ்க்கை வாழ்வதுதான், வாழ்க்கையை அதிக திருப்தியுடன் வாழும் வழி என்பதை அனுபவத்தால் சொல்கிறேன்.
பிறருடன் பொருந்தும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொண்டு வாழும் திறன் தான் ஒரு உண்மையான கிறிஸ்தவனின் அடையாளம். இன்று ஒருவருடன் சுயநலமற்ற முறையிலே உங்களை பொருத்திக் கொள்வீர்களா?
ஜெபம்
தேவனே, அனுதினமும் பிறருடன் எப்படி அன்பாக என்னை பொருத்திக் கொள்வது என்பதை எனக்கு காண்பியும். எப்போதெல்லாம் என்னால் இயலுமோ அப்போதெல்லாம் பிறருடைய தேவைகளை சந்திக்க என்னை சுயநலமின்றி பொருத்திக்கொள்ள விரும்புகிறேன். உம்முடைய அன்போடு அவர்களுக்கு எப்படி உதவுவது என்பதை எனக்கு காண்பித்திருள்வீராக!