“மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;” – எபி 10:24
எனக்கு 3 நண்பர்களுண்டு, அவர்களுடன் நான் சில சமயங்களிலே மதிய உணவு உண்ணவோ அல்லது காபி அருந்தவோ செல்வதுண்டு. நாங்கள் அனேக சமயங்களிலே பிறருக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதற்கு அல்லது ஆசீர்வாதமாக இருப்பதற்கு, புதிய வழிகளைப் பற்றி பேசுவதுண்டு. இத்தகைய சம்பாஷனைகள் தேவனுக்கு மிகவும் பிரியமனவைகளாக இருக்கிறதென்று நான் நம்புகிறேன்.
நற்காரியங்களை செய்ய தீவிரமாக இருக்க உற்சாகப்படுத்தும் கருத்து புதியதல்ல. எபி 10:24 நாம் நேசிக்கவும், நற்காரியங்களை செய்யவும், ஒருவரையொருவர் அனல் மூட்டி எழுப்பி விட வேண்டுமென்று கூறுகிறார். நாம் எப்படி பிறரை நற்காரியங்கள் செய்யவும், நேசிக்கவும், உதவவும் அனல் மூட்டி எழுப்பி விடுவது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும், படிக்க வேண்டும்.
தேவனை நாம் பின்பற்றுவது வல்லமையானது, ஆனால் அது நண்பர்களுடன் இன்னும் சுவாரஸியமாகி விடுகின்றது. தேவனை பின்பற்ற விரும்பும் ஒரே மனமுடைய நண்பர்களை கண்டு பிடிக்க உங்களுக்கு சவால் விடுகின்றேன். நண்பர்களாக கூடி கிறிஸ்தவ வாழ்க்கையை வாழும் நடைமுறை வழிகளைப் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு கூட்டத்தை திட்டமிடுங்கள். எல்லோருமாக இணைந்து தேவனை சேவிக்கவும், அவரது அன்பை இணைந்து வெளிப்படுத்தவும் வழிகளைக் கண்டு பிடியுங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியே, உம்மை அதிகமாக பின்பற்ற எனக்கு உதவும் நண்பர்களுடன் இணைப்பீராக. கிறிஸ்தவ வாழ்க்கையை பிறருடன் இணைந்து, தேவ அன்பில் வாழ, ஒருவரையொருவர் அனல் மூட்டி வாழ விரும்புகிறேன்.