கசப்பு, அவரிடமிருந்து கேட்பதைத் தடுக்கிறது

கசப்பு, அவரிடமிருந்து கேட்பதைத் தடுக்கிறது

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. (எபேசியர் 4:31)

கடவுளிடம் கொண்டிருக்கும் கசப்பு, அவருடைய சத்தத்தைக் கேட்பதற்கு நிச்சயமாகத் தடையாக இருக்கிறது. எந்த நேரத்திலும் கசப்பு உங்களைப் பிடிக்க முயற்சிக்கிறது. அதை மறுக்கவும். பல சமயங்களில், பிசாசு நமக்கு மட்டும் தான் கஷ்டம் என்று நினைக்க வைக்க முயற்சிக்கிறான். நான் அனுதாபமில்லாமல் இருக்க சொல்லவில்லை, ஆனால் நம் பிரச்சனைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், வேறொருவருக்கும் மோசமான பிரச்சனை இருக்கும்.

திருமணமாகி முப்பத்தொன்பது வருடங்கள் கழித்து கணவணால் கைவிடப்பட்ட ஒரு பெண் என்னிடம் வேலை செய்தாள். அவர், ஒரு குறிப்பை மட்டும் அவளிடம் விட்டு விட்டு சென்றுவிட்டார். அது அவளுக்கு நேர்ந்த ஒரு சோகம்! சில வாரங்களுக்குப் பிறகு அவள் என்னிடம் வந்த போது நான் அவளைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டேன். “ஜாய்ஸ், நான் கடவுளிடம் கோபப்படாமல் இருக்க எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். சாத்தான், என்னை அவர் மீது கோபம் கொள்ள மிகவும் கடுமையாக சோதிக்கிறான். என்னால் கடவுள் மீது கோபம் கொள்ள முடியாது. எனக்கு இருக்கும் ஒரே நண்பன் அவர் தான். எனக்கு அவர் வேண்டும்!”

என் தோழியின் இருதயத்தில் கசப்பு வேரூன்ற முயன்றது. ஏனென்றால் அவளுடைய வாழ்க்கை அவள் விரும்பியபடி மாறவில்லை. நாம் காயமடையும் போது, ஒவ்வொரு நபருக்கும் சுதந்திரமான விருப்பம் இருப்பதை நாம் உணர வேண்டும். மேலும் அந்த சுதந்திரமான விருப்பத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது – பிரார்த்தனை மூலம் கூட. நம்மை புண்படுத்தும் மக்களிடம், கடவுள் பேச வேண்டும் என்று நாம் ஜெபிக்கலாம்; தவறு செய்வதற்குப் பதிலாக சரியானதைச் செய்ய அவர்களை வழிநடத்தும்படி நாம் அவரிடம் கேட்கலாம். ஆனால் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், அவர், அவர்களின் சொந்த விருப்பங்களைச் செய்ய அவர்களை கடவுளிடம் விட்டு விட வேண்டும். யாரேனும் ஒருவர் நம்மை புண்படுத்தும் ஒரு தேர்வை செய்தால், அதை நாம் கடவுள் மீது குற்றம் சாட்டி, அவர் மீது கசப்பாக மாறக்கூடாது.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் காயப்பட்டால், கடவுளைக் குறை சொல்லாதீர்கள். அவர் உங்களுக்கு சிறந்த நண்பர்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon