கடவுளைத் தேடுங்கள், பிறகு கடவுளுக்குச் சேவை செய்யுங்கள்

கடவுளைத் தேடுங்கள், பிறகு கடவுளுக்குச் சேவை செய்யுங்கள்

என் குமாரனாகிய சாலமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். (1 நாளாகமம் 28:9)

மதம் சார்ந்த சட்டங்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்றும் கடுமையான மதத் தலைமையால் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இயேசு அனுதாபம் காட்டுகிறார். கடவுள் நல்லவர், அவர் இரக்கம் நிறைந்தவர், நீடிய பொறுமையுள்ளவர், கோபப்படுவதில் தாமதம் உள்ளவர், மன்னிக்கத் தயாராயிருப்பவர் என்று மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்கள் குணமடைந்து மீட்கப்படுவதைக் காண அவர் விரும்புகிறார். கடவுள் கிருபையைத் தருகிறார் – நம்மால் செய்ய முடியாததைச் சுதந்திரமாகச் செய்ய உதவும் அவருடைய வல்லமை.

அவர் நம்மை ஏதாவது செய்யச் சொன்னால், அதை செய்வதற்கு சக்தியற்றவர்களாக நம்மை விடுவதில்லை; நாம் செய்ய வேண்டியதற்கு தேவையானவற்றை அவர் நமக்குத் தருகிறார். “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” (மத்தேயு 11:28) என்று அவர் கூறியபோது, ஆவிக்குரிய தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். சேவை செய்ய முயற்சித்து, தோல்வியடைந்ததைப் போல சோர்வடைந்தவர்களை அவர் ஆறுதல்படுத்த விரும்புகிறார். இன்று தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகமாய் வேலை செய்கிறார்கள். ஆனால் ஆவிக்குறிய ரீதியில் குறைவாக உள்ளனர். மக்கள் கடவுளுடன் ஒரு சக்தி வாய்ந்த உறவைப் பெற விரும்புகிறார்கள். அதற்காய் மதம் சொல்லும் அனைத்தையும் செய்கிறார்கள், இன்னும் அவர்கள் தங்களை ஒன்றுமில்லதவர்களாகக் காண்கிறார்கள்.

கடவுளைப் பிரியப்படுத்துவதற்கான அவர்களின் விருப்பத்தில், அவர்கள் கடவுளைத் தேடுவதையும், அவருடைய சத்தத்தைக் கேட்பதையும் மாற்றியமைத்து, அவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட திசையைப் பெறாமல் கடவுளுக்காக வேலை செய்கிறார்கள். நாம், ராஜ்ய வேலைகளைச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் அவர் நம்மிடம் கேட்காத தியாகங்களில் அவர் திருப்தி அடைவதாக நினைத்து, மத நடவடிக்கைகளில் நாம் மிகவும் பிஸியாக இருப்பதை அவர் விரும்பவில்லை. கடவுளின் செயல்களைச் செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்க நேரம் எடுக்கவில்லை என்றால், மக்கள் எப்படி அதை செய்ய முடியும்?


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கடவுளிடம் கேளுங்கள், பிறகு உங்கள் முழு இருதயத்தோடும் செய்யுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon