
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளிப்படுத்துதல் 3:20)
என் வாழ்க்கையில், பரிசுத்த ஆவியானவரின் முழுமையான இடைபடுதலுக்கு நான் என் இருதயத்தின் கதவைத் திறந்தபோது, அவர் என்னுடன் பேசவும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் என்னிடம் பேசவும் தொடங்கினார்; அவர் சம்பந்தப்படாத எதுவும் இல்லை. எனக்கு அது பிடித்திருந்தது.
நான் மக்களிடம் எப்படி பேசினேன் என்பதைப் பற்றி கடவுள் என்னிடம் பேசினார். எனது பணத்தை எப்படி செலவழித்தேன், எப்படி உடை உடுத்தினேன், எனது நண்பர்கள் யார், பொழுது போக்கிற்காக என்ன செய்தேன் என்று பேசினார். என் எண்ணங்கள் மற்றும் எனது அணுகுமுறைகள் பற்றி அவர் என்னிடம் பேசினார். என்னுடைய ஆழமான இரகசியங்களை அவர் அறிந்திருந்தார் என்பதையும், அவரிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை என்பதையும் நான் உணர்ந்தேன். அவர் இனி என் வாழ்க்கையின் “ஞாயிறு காலை அறையில்” இல்லை, ஆனால் அவர் என் முழு வீட்டையும் இயக்குவது போல் தோன்றியது! என் வாழ்க்கையில் அவர் எப்போது என்னிடம் எதையாவது பேசத் தொடங்குவார் என்று எனக்குத் தெரியாது. நான் குறிப்பிட்டது போல், அது உற்சாகமாக இருந்தது. ஆனால் அது சவாலாகவும் இருந்தது. ஏனென்றால் அவர் என்னிடம் பேசுவது, என் வாழ்க்கையில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று எனக்குத் தெரியும்.
நாம் அனைவரும் சில பகுதிகளில் மாற்றத்தை விரும்புகிறோம். ஆனால் அது வரும்போது, அது பயமாக இருக்கும். நாம் அடிக்கடி, நம் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறோம். ஆனால் நம் வாழ்க்கை முறையை அல்ல. வாழ்க்கையில், நம்மிடம் இருப்பதை நாம் விரும்பாமல் இருக்கலாம், ஆனால் அது மாற்றுகளை விட சிறந்ததாக இருக்குமா என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். நம் வாழ்வின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விடுவோம் அல்லது நம்மால் பார்க்க முடியாத ஒருவரை பொறுப்பேற்க அனுமதிப்பது போன்ற கவலையோ அல்லது பயமோ கூட நமக்கு இருக்கலாம்.
கடவுள் நம் வாழ்வில் செயல்படும் போது, அவருடைய குரலைக் கேட்டு கீழ்ப்படிவது என்பது அவருடைய மகிழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும் வாழ்வதாகும், நம்முடைய சொந்தத்திற்காக அல்ல. நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியின் கதவுகளையும் அவருக்குத் திறப்பதில் நாம் பதட்டமாகவோ அல்லது பயமாகவோ இருக்கலாம். ஆனால் அது மதிப்புக்குரியது என்று நான் உத்தரவாதம் தருகிறேன்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் கடவுளை அழைக்கவும்.