சமாதானம்

சமாதானம்

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலிப்பியர் 4:7)

தேவன் தம் மக்களை, சமாதானத்தின் மூலம் வழிநடத்துகிறார் என்ற தலைப்பில் நான் பல பக்தி நூல்களை எழுதியுள்ளேன், ஆனால் அது மிகவும் முக்கியமானது என்பதால் நான் அதை மீண்டும் ஒரு முறை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நிம்மதியில்லாத காரியங்களைச் செய்பவர்கள் துன்பமான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார்கள், எதிலும் வெற்றி பெற மாட்டார்கள். நாம் சமாதானத்தைப் பின்பற்ற வேண்டும்.

இன்றைய வசனம், தேவன் நம்மை சமாதானத்தின் மூலம் வழிநடத்துகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருந்தால், திடீரென்று அதைப் பற்றி உங்கள் சமாதானத்தை இழந்து விட்டால், நீங்கள் அதைப் பற்றிய ஒரு செய்தியை தேவனிடமிருந்து கேட்டிருக்கிறீர்கள். அந்தச் சூழ்நிலையில் சமாதானம் இல்லாததால், தேவன் உங்களிடம் இப்படி கூறுகிறார், “அதை அணைக்கவும். நீங்கள் பார்ப்பது உங்களுக்கு நல்லதல்ல என்று சொல்கிறார்.

நீங்கள் ஏதாவது மற்றவர்களிடம் சொல்லும் போது, உங்கள் சமாதானத்தை இழந்தால், தேவன் உங்களிடம் பேசுகிறார் என்று அர்த்தம். உடனே மன்னிப்பு கேட்பது என்பது, உங்களுக்கு வரும் நிறைய பிரச்சனைகளை தவிர்க்கும். நீங்கள் சொல்லலாம், “நான் அப்படிச் சொன்னதற்கு மன்னிக்கவும். நான் சொன்னது தவறு; தயவு செய்து என்னை மன்னிக்கவும்” என்று. தேவன் நம் எல்லா முடிவுகளிலும் ஈடுபட விரும்புகிறார். நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் எப்படி உணருகிறார் என்பதை அவர் நமக்குத் தெரிவிப்பதற்கான வழிகளில் ஒன்று, சமாதானத்தை ஒப்புதலாகக் கொடுப்பது அல்லது மறுப்பது.

நமக்கு சமாதானம் இல்லையென்றால், நாம் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை, ஏனென்றால் தேவனுடைய சமாதானம் நம் இருதயத்தில் நடுவராக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் (கொலோசெயர் 3:15 ஐப் பார்க்கவும்). எப்பொழுதெல்லாம் நாம் நம் சமாதானத்தை இழக்கிறோமோ, அப்பொழுது நாம் செய்வதை நிறுத்திவிட்டு, கடவுள் நம்மிடம் என்ன சொல்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். சமாதானம் நம் இருதயங்களில் ஒரு திசைகாட்டியாக செயல்படுகிறது, நமக்கு சரியான திசையை சுட்டிக்காட்டுகிறது. அதனால் தான் வேதத்தில் தேவன் இவ்வாறு கூறுகிறார்: “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபிரேயர் 12:14).


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: சமாதானத்தைப் பின்பற்றுவது, உங்களை பிரச்சினையிலிருந்து காக்கும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon