சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள். (1 தீமோத்தேயு 5:6)
ஒருமுறை நான் விரும்பிய மோதிரத்தைப் பார்த்தேன். ஏனென்றால் நான் கொஞ்சம் பணத்தைச் சேமித்திருந்தேன். நான் அதைப் பற்றி ஜெபிக்க நேரம் ஒதுக்கினேன். உடனடியாக அதை வாங்காமல் என் தூண்டுதலை சோதித்தேன். பின்னர் கேட்டேன், “கடவுளே, இந்த மோதிரத்தை நான் பெறுவது சரியா? இந்தப் பணத்தைக் கொண்டு, நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ, அதை நான் செய்வேன் என்று உமக்குத் தெரியும். ஆனால் அது சரியாக இருந்தால் நான் அதைச் செய்ய விரும்புகிறேன்.
நான் அதை வாங்கக்கூடாது என்று எனக்கு எந்த எண்ணமும் வரவில்லை, அதனால் நான் அதை வாங்கினேன்.
அதோடு நிறுத்தியிருந்தால் இந்த கதைக்கு அது ஒரு நல்ல முடிவாக இருந்திருக்கும். ஆனால் இன்னும் ஒரு வளையல் இருந்தது. விற்பனையாளர் என்னிடம், “இது விற்பனைக்கு உள்ளது, ஆனால் நாளை வரை மட்டுமே. அது உங்களுக்கு நன்றாகத் தெரிகிறது.” என்றார்.
நான் தயங்கினேன், ஆனால், அவர் எனக்காக அதை வாங்குவார் என்று நினைத்துக்கொண்டு டேவைத் தேடிச் சென்றேன்.
டேவ் அதைப் பார்த்தார். அது நன்றாக இருக்கிறது என்று நினைத்து, “சரி, நிச்சயமாக, நீ விரும்பினால் அதைப் பெறலாம்” என்றார்.
நான் அந்த வளையலை வாங்கக்கூடாது என்று என் மனதில் எனக்குத் தெரியும். அதை வாங்குவது, நிச்சயமாக ஒரு பாவமாக இருந்திருக்காது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த ஆனால் தேவையில்லாத ஒன்றை விட்டு விலகிச் செல்வதற்குத் தேவையான மனப்பக்குவத்தை வளர்ப்பதே, அந்த நேரத்தில் எனக்கு அதிக நன்மை, என்று எனக்குத் தெரியும்.
அந்த நேரத்தில், நான் இன்னும் விரும்பினால், அதை பின்னர் பெற கடவுள் என்னை அனுமதிப்பார் என்று உணர்ந்தேன். நான் மோதிரத்தை வாங்கிய அதே நாளில், வளையலையும் வாங்குவதில் எனக்கு நிம்மதி இல்லை. இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அதனால் பெற்றிருக்க்க் கூடிய இன்பத்தை விட, நான் கடைப்பிடித்த சுயக்கட்டுப்பாடு திருப்திகரமாக இருந்ததைக் காண்கிறேன்.
நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், நாம் கடவுளுக்கு செவிசாய்க்க வேண்டும். நமக்கு ஒன்று சரியானதா இல்லையா என்பதை அவர் நமக்குத் தெரிவிப்பார்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: வாழ்க்கையின் சிறிய பகுதிகளிலும், பெரிய விஷயங்களிலும் கடவுள் உங்களை வழிநடத்தட்டும்.