“அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு” – நீதி 8:2
நம் வாழ்க்கைப் பாதையிலே நாம் அனேக தீர்மாணங்களை எடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அதை உணர்ச்சியின் அடிப்படையிலோ அல்லது என்ன நினக்கிறோமோ, விரும்புகிறோமோ அதன் அடிப்படையில் எடுக்கும் போது பிரச்சினக்குள்ளாகி விடுவோம்.
நாம் ஞானமான தீர்மாணங்களை எடுக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஞானமென்பது பிற்காலத்தில் சந்தோசத்தை அனுபவிப்பதற்காக இப்போதே காரியங்களை செய்யத் தெரிந்து கொள்வதாகும் என்று நம்புகிறேன்.
ஞானம் நம்மை அழைக்கிறது என்று நீதிமொழிகள் கூறுகின்றது. நீங்கள் தேவனுடைய ஞானத்திலே நடக்க வேண்டும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, நாளைய எதிர்காலத்தை பாதிக்கும் உன்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அனேகர் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறதில்லை. ஏனென்றால் ஞானமில்லாததால் ஏற்பட்ட குழப்பங்களை தீர்க்கவே முயன்று கொண்டிருக்கின்றனர்.
சுய நல நோக்கோடும், காரியங்களெல்லாம் சரியாகி விடும் என்ற நோக்கத்தோடும் எதையும் செய்யாதீர்கள். ஞானம் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும். அது உடனடியான மன நிறைவிலே தங்கி விடாது. மாறாக அது தேவனை பின்பற்றி ஒரு நல்ல எதிர்காலத்திற்குள்ளாக செல்கின்றது.
எனவே உங்களைப் பற்றி என்ன? இன்று ஞானத்திலே நடக்கின்றீர்களா? இல்லையென்றால் நற்செய்தி என்னவென்றால், ஞானம் ஏற்கனவே உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறது. தேவன் தம்முடைய ஞானத்தை உங்களுக்கு அளிக்க விருப்பமுள்ளவராகவும், ஆயத்தமுள்ளவராகவும் இருக்கிறார். அதற்காக அவரிடம் கேளுங்கள். ஒரு தேவனுக்கேற்ற எதிகாலத்திற்காக முதலீடு செய்ய தீர்மாணியுங்கள்.
ஜெபம்
தேவனே, ஞானமில்லாததால் ஏற்படும் பிரச்சினைகளையே தொடர்ந்து தீர்த்துக் கொண்டிராமல் என் வாழக்கையை அனுபவிக்க நான் விரும்புகிறேன். உம்முடைய ஞானத்தை எனக்கு அளிப்பதற்காக உமக்கு நன்றி. அதை பெற்றுக் கொண்டு என்னுடைய எதிர்காலத்திற்காக தேவனுக்கேற்ற தீர்மாணங்களை எடுக்க தெரிந்து கொள்கிறேன்.