வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 12:10)
யாரோ ஒருவருக்கு அல்லது ஒரு குழுவிற்கு அல்லது ஒரு சூழ்நிலைக்கு, கடவுளிடமிருந்து ஒரு தெளிவான செய்தியைக் கேட்டு, ஒருவர் பேசும் போது தீர்க்கதரிசனத்தின் உண்மையான வரம் செயல்பாட்டிற்கு வருகிறது. சில நேரங்களில் ஒரு தீர்க்கதரிசனம் மிகவும் பொதுவாக இருக்கும். சில நேரங்களில் அது மிகவும் குறிப்பிட்டதாக இருக்கும். இது ஒரு தயாரிக்கப்பட்ட செய்தி அல்லது பிரசங்கத்தின் மூலம் வரலாம் அல்லது தெய்வீக வெளிப்பாட்டால் வரலாம்.
தீர்க்கதரிசன வரம் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று உண்மையான தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள், ஆனால் பொய்யான தீர்க்கதரிசிகளும் இருக்கிறார்கள். கடவுளிடமிருந்து பெற்ற வார்த்தையை பேசும் போது தீங்கு விளைவிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கடவுளுடைய ஆவியால் பேசுவதற்குப் பதிலாக தங்கள் சொந்த மனம், விருப்பங்கள் அல்லது உணர்ச்சிகளிலிருந்து பேசும் போது தீங்கை விளைவிக்கிறார்கள்.
உண்மையான தீர்க்கதரிசனத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் மக்களின் “ஆக்கபூர்வமான ஆவிக்குறிய முன்னேற்றம், ஊக்கம், ஆறுதல் மற்றும் அவர்களை கட்டியெழுப்புவதாகும்” (1 கொரிந்தியர் 14:3). பரிசுத்த ஆவியின் அனைத்து வரங்களும், அனைவரின் நன்மைக்காகவும் உள்ளன. கூடுதலாக, கடவுளிடமிருந்து வந்த ஒரு உண்மையான வார்த்தை, சமாதானத்துடன் சேர்ந்து உங்கள் இருதயத்திலும், ஆவியிலும் “குடியேறும்”; இது உங்கள் இருதயத்தில் ஏற்கனவே உள்ள ஒன்றை, அது தெளிவற்றதாக இருந்தாலும், அதை உறுதிப்படுத்தும். இந்த அளவுகோல்கள், ஒரு தீர்க்கதரிசனம் உண்மையானதா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவும். நிச்சயமாக, தீர்க்கதரிசனத்தின் உண்மையான சோதனை, அது நிறைவேறுமா, இல்லையா என்பதுதான். இதை நினைவில் கொள்ளுங்கள்: உண்மையான தீர்க்கதரிசனம் நிறைவேறும். தீர்க்கதரிசன வரம் உள்ளவர்கள் மட்டும் கடவுளிடமிருந்து கேட்பவர்களல்ல. உங்களுக்கும் அவருடைய குரலைக் கேட்கும் திறனும், உரிமையும் உள்ளது. எனவே நீங்கள் பெறும் தீர்க்கதரிசனங்களுக்குப் பின்னால் உள்ள ஆவியை எப்போதும் முயற்சி செய்து, அவை உங்கள் இருதயத்தில் சாட்சியாக இருப்பதை உறுதிசெய்ய அவற்றைச் சோதிக்கவும் (1 யோவான் 4:1ஐப் பார்க்கவும்).
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: மக்கள் உங்களுக்கு அறிவுரைகளை வழங்கும்போது, அது கடவுளிடமிருந்து வந்ததாகச் சொல்லும் போது, அது கடவுளுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகிறது மற்றும் உங்கள் சொந்த இருதயத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.