
“பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.” – 1 சாமு 17:37
பிரச்சினைகளின் சமயங்களிலே, தேவனால் விடுவிக்க இயலாது என்பதைப் போன்று உணரலாம். உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்த, தேவன் தம்முடைய பிள்ளைகளை அவர்களின் இடுக்கண்களிலிருந்து விடுவித்த வேதாகம நிகழ்வுகளை பார்க்கவும்.
1 சாமு 17:37லே, தாவீது தான் கோலியாத்தை தோற்கடிக்க இயலும் என்று அறிந்திருந்தான். ஏனென்றால் தேவன் அவனை ஏற்கனவே ஒரு சிங்கத்திடமிருந்தும், கரடியிடமிருந்தும் காப்பாற்றி இருந்தார். தானியேல் 3லே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ விக்கிரகத்தின் முன் பணிய வேண்டுமென்ற அரசாணைக்கு பணிய மறுத்து, தேவனை தொடர்ந்து ஆராதித்தனர். அதன் விளைவாக, ஏழுமடங்கு அதிகம் சூடாக்கப்பட்ட அக்கினி சூளையிலே போடப்பட்டனர். ஆனால், தேவனோ அந்த சூழ்னிலையிலிருந்து அவர்களை முற்றிலுமாக விடுவித்தார். அவர்களின் மேல் புகை வாசனை கூட வரவில்லை. அவர்களுடன் அக்கினியிலும் கூட காணப்பட்டார்.
தேவன் விடுவிக்க விருப்பமுள்ளவராகவும், விடுவிக்க கூடியவராகவும் இருக்கிறார் என்பதற்கு தானியேல் மற்றும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஒரு உதாரணம். தேவனிடம் ஜெபிப்பதற்காக சிங்கக் கெபியிலே தூக்கி எறியப்பட்ட தானியேல், அத்தகைய விடுதலையை அறிந்திருந்ததால், அந்த துன்பத்திலிருந்து கொஞ்சமும் சேதமடையாமல் வெளியே வந்தான். அவனுடைய எதிரிகளோ முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டனர் (தானியேல் 6).
இதிலே ஒரு போக்கு காணப்படுகிறதை கவனித்தீர்களா? தேவன் அவர்கள் செய்ய வேண்டுமென்று விரும்புவதை செய்ய, தேவனுடைய மக்கள் விசுவாசத்திலே செய்ய முற்படும் போது தேவன் அதற்கு பிரதிக் கிரியை செய்து, வெற்றியை அளிக்கிறார். தேவனால் தம்முடைய பிள்ளைகளை எவ்விதமான சூழ்னிலையினின்றும் விடுவிக்க இயலும். உங்களுடைய பிரச்சினையை விட, உங்களை விடுவிக்கும் அவரது வல்லமையானது பெரியதாக இருக்கின்றது என்பதை இன்று அறிந்து கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, காலம் காலமாக நீர் உம்முடைய பிள்ளைகளை பிரச்சினையினின்று விடுவித்திருக்கின்றீர். நீர் இப்போதும் செய்வீர் என்று அறிந்திருக்கிறேன். என்னுடைய சூழ்னிலையை சமாளிக்க உம்மால் கூடும் என்று அறிந்திருப்பதால் என் நம்பிக்கையை உம்மீது வைக்கிறேன்.