“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” – 1 கொரி 6:19
நான் 64 வயதாகும் வரை, முறையாக, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தது கிடையாது. அதைப் பொருட்படுத்தியதும் இல்லை. நான் கொஞ்சம் நன்றாக இருப்பதற்கும், தோன்றுவதற்கும், நடப்பதுண்டு. ஏதோ சில உடற்பயிற்சிகளை செய்ததுண்டு. ஆனால் உடற்பயிற்சிக்கு என்னை அர்பணிக்கவில்லை. அதற்கு காலம் கடத்தி வந்தேன். அனேக காரணங்களை கூறிய வண்ணம் இருந்தேன். ஆனால் தேவன் என் இருதயத்திலே, என்னுடைய வாழ்க்கையின் இறுதியில், நான் பெலனுள்ளவளாக இருப்பதற்கு உடற்பயிற்சி திட்டத்தை நான் தொடங்க வேண்டுமென என்னை உற்சாகப்படுத்தினார்.
நான் ஏற்கனவே நல்ல முறையான உணவுப் பழக்கங்களை கொண்டிருந்தேன். தேவனுக்கு கீழ்படிந்து ஒரு வாரத்திலே பல முறை நான் உடற்பயிற்சி மையத்திற்கு செல்லத் தொடங்கிய போது, நான் என் வாழ்வின் ஒரு புதிய பருவத்திற்குள்ளாக நுழைந்தேன். நான் நன்றாக தோற்றமளித்தேன், நன்றாக உணர்ந்தேன். அதிக முக்கியமானதாக, நான் தேவன் எனக்கு கொடுத்திருக்கும் சரீரத்தை நல்ல முறையிலே பராமரித்து தேவனை மகிமைப்படுத்திக் கொண்டிருந்தேன்.
இந்தப் பகுதியிலே முன்னேற உங்களுக்கு வாய்ப்பு இருக்குமேயென்றால், ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ நீங்கள் என்ன செய்ய வேண்டுமென தேவனிடம் கேளுங்கள். வேதம், நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயம் என்று சொல்கிறது. தேவன் தமது ஆலயத்தை விரும்புகிறாரென்று நான் உறுதிபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்! இன்று உங்கள் ஆலயத்தை தேவனுக்காக சிறப்பாக வைத்துக் கொள்ளும் படி தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, ஒரு நல்ல சரீர ஆரோக்கியம் கொண்ட வாழ்க்கை முறைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். என்னுடைய ஆரோக்கியத்தை தொடர்ந்து மேம்படுத்தும். நல்ல தேர்வுகளை செய்ய எனக்கு உதவும். என்னுடைய சரீரம் உம்முடைய ஆலயம், அதை உமக்காக நன்றாக வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.