ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். (நீதிமொழிகள் 2:3-5)
இன்றைய வசனம், நாம் ஞானத்தைத் தேடவும், அதைப் புரிந்து கொள்ளும்படி கூக்குரலிடவும் நம்மைத் தூண்டுகிறது. ஏனென்றால், கடவுளுடைய ஞானம் எந்த மனிதனின் சிறந்த யோசனைகளையும் விட அதிகமாக உள்ளது. கடவுள் ஆரம்பத்திலிருந்து முடிவைப் பார்க்கிறார், அவர் மக்களின் இருதயத்தையும், நோக்கங்களையும் பார்க்கிறார், நாம் செய்யாதவற்றையும் அவர் அறிவார். நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்துக் கொண்டிருந்தாலும், எதிரியின் முழு அளவிலான தாக்குதலுக்கு உட்பட்டிருந்தாலும், கடவுளுடைய ஞானம் மாற்றத்தை ஏற்படுத்தும்—அந்த ஞானத்தைப் பெறுவதற்கான ஒரே வழி அவரிடம் கேட்பது தான்.
பல நேரங்களில், கடவுள் நம்மிடம் பேசும்போது, அவர் ஞானத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு சூழ்நிலையைப் பற்றிய ஞானத்தைப் பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட நுண்ணறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலமோ அல்லது நாம் எடுக்க வேண்டிய தீர்மானங்களைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுவதன் மூலமோ அவர் நமக்கு உதவி செய்யலாம். அவர் தனது ஞானத்தை பல்வேறு வழிகளில் தெரியப்படுத்த முடியும், நாம் அதை ஒரு விலைமதிப்பற்ற பரிசாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடவுளின் ஞானத்தை, விலைமதிப்பற்ற ஆவிக்குறிய பொக்கிஷமாக மதிப்பிடவும், அது இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கருதுவதற்கு நான் உங்களை ஊக்குவிக்கிறேன் – ஏனென்றால் அது உங்களால் முடியாது. நீங்கள் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற விரும்பினால் உங்களால் முடியாது. பெரிய, சிறிய மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் கடவுளிடம் அவருடைய ஞானத்தை ஜெபத்தில் கேட்பதை வழக்கமாக்குங்கள். அவர் அதை உங்களுக்குக் கொடுப்பார், அதன் முடிவுகளால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பெரியதோ அல்லது சிறியதோ எல்லா பிரச்சினையிலும், கடவுளுடைய ஞானம் தேவை.