தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். (சங்கீதம் 84:11)
நாம் ஏதாவது தவறு செய்கிறோமா, அவரை துக்கப்படுத்துகிறோமா, அவருடனான நமது உறவுக்கு இடையூறு விளைவிக்கிறோமா, அல்லது நம் வாழ்வில் அவருடைய பிரசன்னத்தை உணராமல் இருக்கிறோமா என்பதை நம் மனசாட்சியின் மூலம் பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தெரியப்படுத்துகிறார். நாம் இருக்க வேண்டிய இடத்திற்குத் திரும்புவதற்கு உதவுகிறார். அவர் நமக்கு உணர்த்துகிறார், நம்மை நம்புகிறார், ஆனால் அவர் ஒருபோதும், ஒருபோதும் நம்மைக் குற்றப்படுத்துவதில்லை.
நாம் நம் சொந்த பிள்ளைகளை நேசிப்பதை விட, தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார், அவருடைய அன்பில் அவர் நம்மை ஒழுங்குபடுத்துகிறார். என் பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தபோது, அவர்களிடமிருந்து சலுகைகளைப் பறிப்பதை நான் எப்படி வெறுத்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்கக் கற்றுக் கொள்ளாவிட்டால், அவர்கள் இன்னலுக்குக் ஆட்படுவார்கள் என்பது எனக்குத் தெரியும். தேவனும் நம்மீது அதே வகையான அக்கறை கொண்டிருக்கிறார், ஆனால் அவர் பொறுமையாக இருக்கிறார். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் நமக்குச் சொல்கிறார், மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவர் பதினைந்து வெவ்வேறு வழிகளில் அதைச் சொல்லலாம், நம் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்யலாம், ஆனால் நம்முடைய சொந்த நன்மைக்காக, நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
அன்பை உறுதிப்படுத்தும் கடவுளின் செய்தி எல்லா இடங்களிலும் உள்ளது. அவர் நம்மை நேசிப்பதால் நாம் அவருக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் நம்முடைய சொந்த வழிகளில் விடாப்பிடியாக இருந்தால், நம்மிடமிடம் வரும் சலுகைகளையும், ஆசீர்வாதங்களையும் அவர் தடுக்கிறார். ஆனால் அவர் தம்முடைய முழு ஆசீர்வாதங்களையும் நம்மீது ஊற்றக்கூடிய இடத்திற்கு செல்ல, நாம் முதிர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு செய்கிறார். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்குத் தாராளமாகத் தந்திருப்பதால், நமக்குத் தேவையான எதையும் அவர் நிச்சயமாகத் தடுத்து நிறுத்தவே மாட்டார். அவர் நம் தேவைகளைப் பூர்த்தி செய்து நம்மை ஏராளமாய் ஆசீர்வதிப்பார் என்று நம்பலாம்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்களை சிட்சித்தாலும், உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதை நினைவில் வையுங்கள்.