கடவுள் உங்களைக் கண்டுபிடிப்பார்

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; (சங்கீதம் 33:18)

நான் தேவனிடமிருந்து கேட்க மிகவும் கடினமாக முயற்சி செய்து, தவறு செய்து விடுவேனோ என்று பயந்த ஒரு காலம் எனக்கு நினைவிருக்கிறது. அந்த நேரத்தில், நான் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கு கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஆவியானவரால் வழிநடத்தப்படுவது எனக்குப் புதிது, நான் உண்மையிலேயே கேட்கிறேனா, இல்லையா என்பதை அறிய கடவுளிடமிருந்து கேட்ட அனுபவம், எனக்கு போதுமானதாக இல்லாததால் நான் பயந்தேன். நம் இருதயம் சரியாக இருந்தால், தேவன் நம் தவறுகளிருந்து நம்மை இரட்சிப்பார் என்பது எனக்குப் புரியவில்லை.

அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார், நான் விசுவாசத்தில் ஏதாவது செய்ய வேண்டுமென்று என்னை தள்ள முயற்சித்தார், ஆனால் நான் தொடர்ந்து சொன்னேன், “ஆண்டவரே, நான் உம்மை தவறவிட்டால் என்ன செய்வது? நான் உண்மையில் கேட்காததால் தவறு செய்தால் என்ன செய்வது? நான் உம்மை இழக்க நேரிடும் என்று நான் பயப்படுகிறேன், கடவுளே!

அவர் என்னிடம் பேசி எளிமையாக சொன்னார், “ஜாய்ஸ், கவலைப்படாதே. நீ என்னைத் தவறவிட்டால், நான் உன்னைக் கண்டுபிடிப்பேன்.” அந்த வார்த்தைகள், தேவன் என்னைச் செய்ய அழைத்ததைச் செய்ய எனக்கு தைரியத்தை அளித்தது மற்றும் என் இருதயத்திற்கு மிகுந்த சமாதானத்தைத் தந்தது. நான் முதன் முதலில் அவற்றைக் கேட்டதிலிருந்து, பலமுறை விசுவாசத்தில் இறங்கும்படி, அவருடைய சத்தம் என்னை ஊக்குவித்திருக்கிறது. கடவுள் இப்போது உங்களுக்குச் சொல்வதற்கேற்ப நீங்கள் எடுக்க வேண்டிய விசுவாசத்தின் படிகளை எடுக்க, உங்களை ஊக்குவிக்க இன்று அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை நீங்கள் விரும்பினால், கடவுளிடமிருந்து கேட்க உங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் நீங்கள் செய்திருந்தால், நீங்கள் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி, ஏதாவது செய்ய, வெளியே வர வேண்டும், அவரை நம்ப வேண்டும். நீங்கள் தவறு செய்தாலும், கடவுள் அதை சரி செய்து உங்களுக்கு நன்மை செய்வார்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளிடமிருந்து நீங்கள் கேட்டதாக நீங்கள் நம்புவதை செய்யுங்கள், அவரைக் காணவில்லை என்று பயப்பட வேண்டாம்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon