
மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள். – 2 கொரிந்தியர் 8:5
ஒரு நாள் காலையிலே தேவனுடனான என்னுடைய அமைதி நேரத்திலே நான் அவரிடம், உலகத்திலே பசியோடு இருக்கும் சிறுவர்கள், ஆட் கடத்தல்கள், கூட்டு கொலைகள், அநியாயங்கள், நலிவுகள், வறுமை போன்ற வலிகளை எல்லாம் பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க உம்மால் எப்படி முடிகிறது என்று கேட்டேன்.
அதை ஒரு குறையாக சொல்லவில்லை. அப்படி என்றால் நான் அவருடைய உண்மை தன்மையை கேள்வி கேட்கிறவளாகி விடுவேன். அவரிடமிருந்து பதிலை பெற்றுக் கொள்வேன் என்று எதிர்பார்த்து கேட்கவில்லை. ஆனால் சும்மா கேட்டேன் / சொன்னேன். உடனடியாக அவருடைய பதில் எனக்கு கிடைத்தது. நான் மனுஷர் மூலமாக செயல்படுகிறேன். என்னுடையவர்கள் எழுந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
நீங்களும் நானும் கிறிஸ்துவின் சரீரம் என்ற சேனையின் பங்காக இருக்கின்றோம். இவ்வுலகத்தில் மாற்றம் ஏற்படுத்த ஒவ்வொருவரும் நம் பங்கை செய்ய வேண்டும். தேவன் நம் மூலமாக கிரியை செய்ய விரும்புகிறார். நாம் அன்பை தரித்துக்கொண்டு வேலை செய்ய சொல்கிறார்.
2 கொரிந்தியர் 8 லே, பவுல் மக்கள் மக்கெதோனியா சபையினர் கொடுத்தார்கள் என்று சொல்லுகிறார். அப்படி சொல்லும்போது அவர், அவர்கள் முதலாவது தங்களையே தேவனுக்கும், எங்களுக்கும் கொடுத்தனர் என்று சொல்கிறார். தேவனுடைய சித்தத்தின் படி அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை எல்லாம் புறக்கணித்து எவ்வளவு கொடுக்க இயலுமோ அவ்வளவாக தேவனுடைய சித்தத்தின் படி நடத்தப்பட ஒப்புக் கொடுத்தனர் என்கிறார்.
என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. ஏனென்றால் அவர்கள் தங்கள் பணத்தை மட்டும் கொடுக்கவில்லை, தங்களையே கொடுத்தனர். நாமும் அப்படியாகவே வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். சேவை செய்யும் ஒருவன் ஒரு ஆழமான வித்தியாசத்தை ஏற்படுத்த கூடும். எனவே எப்படி தேவனுக்கு அவருடைய வேலை செய்பவராக இருக்க உங்களை சமர்ப்பிக்க போகின்றீர்கள்?
ஜெபம்
தேவனே, என் மூலமாக நீர் கிரியை செய்ய உம்மை அழைக்கிறேன். நான் சுயநலத்தை விட்டு விட்டு அன்பை எடுத்துக்கொள்ள தெரிந்து கொள்கிறேன். அதனால் உலகை மாற்ற என்னை உம்மால் உபயோகிக்க கூடும்.