“ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.” – நீதி 28:1
சிலர் தைரியத்தை வெளிப்பிரகாரமாக காட்டுகின்றனர் மற்றவர்களோ தேவனுடைய பிள்ளையாக தைரியமாக வாழப் போராடுகின்றனர். தைரியமாக வாழ எனக்கு உதவிய சில முக்கியமான வழி முறைகளை தேவன் எனக்கு காட்டும் வரை நானும் அவ்வண்ணம் தான் இருந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- பயத்தோடு வாழ்வதை மறுங்கள். பயமானது நம் சமுதாயத்திலே ஒரு தொற்று நோய் போல் இருக்கிறது. வேதம் நமக்கு, எபி 10:38-ல் விசுவாசத்தோடு வாழவும், பயத்தால் பின்னடையக் கூடாதென்று அறிவுறுத்துகின்றது.
- பின்னடைவுகளை பின்னாக வையுங்கள். புதிய காரியங்களை செய்ய முயன்று அவை சித்திபெறாமல் நீங்கள் தோற்றுப் போனவர் கிடையாது. முயற்சி செய்வதை விட்டு விடும் போது தான் நீங்கள் தோற்றுப் போகின்றீர்கள். தவறுகள் செய்ய பயப்பட வேண்டாம். அப்படி செய்வீர்களென்றால் அவற்றிலிருந்து சீக்கிரமே மீண்டு முன்னோக்கி செல்லுங்கள்.
- ஒப்பிட்டுக் கொள்ளாதீர். பிறருடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்கும் வரை தைரியமானது இயலாததொன்றாகி விடும். தைரியமானது நீங்கள் யாராக இருக்கின்றீர்களோ அதை ஏற்றுக் கொண்டு உங்களால் முடிந்த அளவு சிறப்பானவர்களாக இருக்கும் போதே துணிவு ஏற்படுகின்றது.
- செயல்பட விருப்பமுள்ளவர்களாக இருங்கள். தேவன், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்பிகிறாரென்று நீங்கள் நம்புகிறீர்களென்பதை உங்கள் இருதயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். பின்னர் அதை செய்யுங்கள்.
இந்த நான்கு வழிகளைக் குறித்து ஜெபியுங்கள். அதன் படி வாழ்வதற்கு பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ கேளுங்கள். கிறிஸ்துவுக்குள் அவருடைய கிருபையினாலே நீங்கள் தைரியம் கொண்டவர்களாயும், துணிச்சல் மிகுந்தவர்களாகவும் இருக்கலாம்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, தைரியமானது என்னைப் பற்றி விளக்கமளிக்கும் ஒரு குணாதசியமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உம்முடைய பெலத்தினாலே இந்த நான்கு வழிமுறைகளின் படி வாழ எனக்கு உதவுவீராக