கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி? (நீதிமொழிகள் 20:24)
தேவன், எங்களை ஒரு தொலைக்காட்சி ஊழியத்தைத் தொடங்க அழைப்பதை டேவும் நானும் உணர்ந்த போது, விசுவாசத்தின் மூலம் அந்த திசையில் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தோம். பணம் இல்லாமல் எங்களால் அதைச் செய்ய முடியாது. எனவே நாங்கள் செய்த முதல் காரியம், எங்கள் அஞ்சல் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு தொலைக்காட்சி ஊழியத்தைத் தொடங்க எங்களுக்கு உதவுவதற்கு நிதி வழங்குமாறு நண்பர்களிடமும், ஊழியப் பங்காளர்களிடமும் கேட்டுக் கொண்டோம். எங்களுக்கு, வேண்டிய ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைப் பற்றி கடவுள் எங்கள் இருதயங்களுடன் பேசியதாக நாங்கள் உணர்ந்தோம். அதே தொகையைதான் நாங்கள் பெற்றோம்.
பின்னர் நாங்கள் மற்றொரு படி எடுத்தோம். எங்களுக்கு ஒரு தயாரிப்பாளர் தேவை, கடவுள் கொடுத்தார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் கொடுப்பதைப் பற்றி கடவுள் எங்களிடம் பேசுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒருவர் தொலைக்காட்சி தயாரிப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். நாங்கள் தொலைக்காட்சியில் இல்லாததால், அவருடைய சேவைகள் எங்களுக்குத் தேவையில்லை என்று கூறியிருந்தோம். நேரம் வந்த போது, அந்த மனிதரை நினைவு கூர்ந்தோம். எங்களிடம் ஒன்று இருப்பதை அறிவதற்கு முன்பே கடவுள் நம் தேவையை பூர்த்தி செய்துவிட்டார் என்பதை உணர்ந்தோம்.
நாங்கள் எடுத்த அடுத்த படி, வாரத்திற்கு ஒருமுறை, சில தொலைக்காட்சி நிலையங்களில் நேரத்தை வாங்குவதாகும். நிகழ்சிகள் நல்ல பலனைக் கொடுத்த்தால், அதிக நேரம் வாங்கினோம். இறுதியில் நாங்கள் தினசரி தொலைக்காட்சிற்கு சென்றோம். இப்போது ஒரு தினசரி நிகழ்ச்சி, பிரார்த்தனையுடன், உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு, மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவுகிறது.
தேவன் டேவையும், என்னையும் ஒருமுறைக்கு ஒரு படி என வழிநடத்தினார். அப்படித்தான் அவர் உங்களையும் வழிநடத்துவார். ஒவ்வொரு முறையும், நாங்கள் விசுவாசத்தின் அடி எடுத்து வைக்கும் போது, கடவுள் எங்களுக்கு தயவைத் தந்தார். மேலும் நீங்கள் அவரிடமிருந்து தயவை எதிர்பார்க்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். கடவுள் ஏற்கனவே உங்கள் தேவைகளை அறிந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கான பதில் இருக்கிறது. எனவே பயம் உங்கள் கதவைத் தட்டும் போது, விசுவாசத்துடன் பதில் சொல்லுங்கள். நீங்கள் பெரிய காரியங்களைச் செய்வீர்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்களை வழிநடத்துகிறார் மற்றும் உங்களுக்கு தயவைத் தருகிறார் என்பதில் உறுதியாக இருங்கள்.