சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி. (எபேசியர் 5:19)
“சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி.” இந்த வசனத்தை இரண்டு வழிகளில் பயன்படுத்த விரும்புகிறேன். நான் என்னுடன் பேசுவது முக்கியம், மற்றவர்களிடம் நான் பேசும் விதமும் முக்கியமானது.
எதிர்மறையான விஷயங்கள், பிரச்சினைகள், ஏமாற்றங்கள் மற்றும் போராட்டங்களைப் பற்றி பேசும் வலையில் விழுவது எளிது. ஆனால் அவற்றில் எதுவுமே ஆவியால் நிரப்பப்பட நமக்கு உதவுவதில்லை. மேலும் பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் என்ன பேச விரும்புகிறார் என்பதைப் பிரதிபலிக்கவில்லை. ஏனென்றால் அவர் எந்த வகையிலும் எதிர்மறையாக இல்லை. அவர் ஒரு பிரச்சனையைப் பற்றி நம்மிடம் பேசும் போது கூட, ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்காகப் பேசுகிறார்; கடினமான சூழ்நிலைகளைப் பற்றி அவர் நம்மிடம் பேசும்போது, நமக்கு ஆறுதலையும், வலிமையையும் தருவதற்காக அவ்வாறு செய்கிறார். நம்முடைய பிரச்சினைகளைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாக சிந்தித்துப் பேசுகிறோமோ, அவ்வளவாய் பலவீனமாகி விடுகிறோம். ஆனால் இயேசுவைப் பற்றியும், அவர் நமக்கு அளித்த வாக்குறுதிகளைப் பற்றியும் பேசும் போதும், சிந்திக்கும்போதும் நாம் பலப்படுத்தப்படுகிறோம்.
வாழ்க்கை எப்போதும் எளிதானது அல்ல; நாம் அனைவரும் சில நேரங்களில் சிரமங்களை எதிர்கொள்கிறோம். கடினமான காரியங்களைச் சுலபமாகச் செய்ய தேவன் நம்மைத் தம் ஆவியால் நிரப்பியிருக்கிறார். நீங்கள் கடினமான நேரத்தைச் சந்திக்கும் போது, உங்கள் காதை கடவுளின் சத்தத்துக்கு நேராய் கொண்டு செல்லுங்கள். கடவுள் உங்களுக்குச் சொல்லும் நேர்மறையான விஷயங்களை, அவருடைய வார்த்தையின் மூலமாகவும், உங்கள் இருதயத்தில் உள்ள அவருடைய ஆவியின் மூலமாகவும் பேசுங்கள். நாம் அனைவரும் சொல்லும் வார்த்தைகளை நாமே கொண்டு வருகிறோம். எனவே நல்ல வார்த்தைகளை பேசுவது மிகவும் முக்கியம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று உங்கள் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள், ஏனென்றால் அவை வாழ்க்கை அல்லது மரணத்தின் சக்தியைக் கொண்டுள்ளன.