“பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள், எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.” – மாற்கு 4:24
நீங்கள் ஒரு விசுவாசி என்றால், ஒவ்வொரு நாளும் சில வேத அடிப்படையிலான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் இதைப் பற்றி சிந்தியுங்கள்:
அவற்றை நீங்கள் எதிர்மறை எண்ணங்களுடனும், உங்கள் மனதில் வரும் ஏதேனும் சீரற்ற எண்ணங்களுடனும் கலந்து விடுகின்றீர்களா?
என் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தில், எனக்கு தோன்றியதைப் பற்றி நான் வெறுமனே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தோன்றியவற்றில் பெரும்பாலானவை சாத்தான் என்னிடம் சொல்லும் பொய்கள் அல்லது வெறும் முட்டாள்தனம்.
மாற்கு 4:24 ஐப் படியுங்கள். வார்த்தையைப் பற்றி சிந்திக்க நாம் எவ்வளவு அதிகமாக நேரம் செலவிடுகிறோமோ அவ்வளவு அதிகமாக அதை செயல்படுத்தும் வல்லமையைப் பெற்றுக் கொள்வோம் என்று சொல்கிறது. நாம் எவ்வளவு அதிகமாக வார்த்தையை கவனித்து கேட்கிறோமோ அவ்வளவு அதிகமாக அதைப் புரிந்து கொள்வதற்கான வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்வோம் என்று கூறுகிறது.
மாம்சத்தில் நாம் சோம்பலாக இருக்கிறோம். நம்முடைய சொந்த முயற்சியில்லாமல் கடவுளிடமிருந்து பெற விரும்புகிறோம், ஆனால் அது அப்படியாக செயல்படுவதில்லை. நீங்கள் வார்த்தைக்காக எவ்வளவாய் கொடுக்க விரும்புகிறீர்களோ அவ்வளவு மட்டுமே அதிலிருந்து பெற்றுக் கொள்வீர்கள்.
ஒவ்வொரு நாளும் கடவுளுடைய வார்த்தையை தியானிக்க ஒரு முடிவை எடுக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு கணமும், அதை அறிந்து கொள்வதற்கு, கடவுளிடமிருந்து நீங்கள் அறிவையும், குண நலங்களையும் பெற்றுக் கொள்வீர்கள்.
ஜெபம்
ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தையில் அதிக நேரம் செலவிட முடிவு செய்கிறேன். அப்படி நான் செய்யும் பொழுது, நான் அதிலிருந்து அதிகமானவற்றைப் பெறுவேனென்றும், உம்மிடமிருந்து அதிக நற்பண்புகளையும், அறிவையும் பெறுவேன் என்று அறிந்திருக்கிறேன்.