நீங்கள் தனியாக இல்லை

நீங்கள் தனியாக இல்லை

இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. (லூக்கா 4:1-2)

இயேசு பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற உடனேயே, நாற்பது நாள் பகலும், இரவும், பிசாசினால் சோதிக்கப்படும்படி, பரிசுத்த ஆவியால் வனாந்தரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை இன்றைய வசனங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். இது மிகவும் கடினமான அனுபவமாக இருக்கலாம். ஆனால் இயேசு உடனடியாக ஆவியின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்தார். அவர் பரிசுத்த ஆவியானவரை நம்பினார். அவர் எதிர்கொள்ளும், கஷ்டங்கள் கூட, இறுதியில் அவருடைய நன்மைக்காக செயல்படும் என்பதை அறிந்திருந்தார்.

வனாந்தரத்தில் நாற்பது நாட்களின் முடிவில், லூக்கா 4:14-ல் பார்க்கிறபடி, இயேசு தம்முடைய பொது ஊழியத்தைத் தொடங்கினார்: “இயேசு, [பரிசுத்த] ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பினார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரவிற்று.” அதிகாரத்திற்கும், புகழுக்கும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றுவதற்கு இயேசு தயாராக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; கடினமான காலங்கள் மற்றும் சோதனை காலங்களிலும் அவரைப் பின்தொடர அவர் தயாராக இருக்க வேண்டும்.

கடினமான காலங்களில் கடவுளுக்குக் கீழ்ப்படிவது தெய்வீக குணத்தை வளர்க்க உதவுகிறது. நாம் பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரியை இயேசு வைத்தார். இக்கட்டான காலங்களில் பரிசுத்த ஆவியானவரின் தலைமையைப் பின்பற்றுவது, நம்மில் விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் பலத்தை வளர்க்கிறது—கடவுள் நம்மிடம் இருக்க வேண்டும் என்று விரும்பும் குணங்கள்.

நம்முடைய வாழ்க்கைக்கான அவருடைய திட்டங்களை நிறைவேற்ற உதவும் பரிசுத்த ஆவியானவரை தேவன் நமக்குத் தந்திருக்கிறார். சில சமயங்களில், கடவுள் திட்டமிட்டதைச் செய்வதற்கு நமக்குத் தேவையான குணத்தை வளர்த்துக் கொள்வதற்காக நாம் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நாம் எப்பொழுதும் எதையும்-கஷ்டங்கள் அல்லது நல்ல நேரங்களை-தனியாக எதிர்கொள்வதில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர், எப்பொழுதும் நமக்கு உதவுகிறார். அவருடைய வழிகள் எப்போதும் சிறந்தவை.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடினமான நேரங்களுக்கு பயப்பட வேண்டாம். ஏனென்றால் அவை இறுதியில் உங்களை பலப்படுத்துகின்றன.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon