உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான். (யாத்திராகமம் 33:13)
நீங்கள் தேவனுடன் நேரத்தை செலவிடும்போது, அவருக்கு வழியை விடுகிறீர்கள். உங்களுக்குள் ஒரு சமாதானம் வருகிறது, நீங்கள் எளிதாக பழகக் கூடியவர்களாகி விடுகிறீர்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் நிலையாக இருப்பீர்கள். கடவுளுடன் தரமான நேரத்தைச் செலவிடுவது சிறப்பான பலன்களைத் தரும் முதலீடாகும். அவர் எதை விரும்புகிறார், எது அவரை புண்படுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். ஒரு நண்பரைப் போல, நீங்கள் அவருடன் எவ்வளவு அதிகமான நேரம் செலவிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் அவரைப் போல் ஆகிவிடுவீர்கள்.
கடவுளுடன் நேரத்தைச் செலவிடுவது, நீங்கள் உங்களிடத்திலும், மற்றவர்களிடத்திலும் அன்பை காட்டுவதற்கு உங்களை தயார் செய்கிறது. நீங்கள் ஒருவரிடம் அவருக்குப் பிடிக்காத வகையில் பேசும்போது, உங்கள் மனசாட்சி உங்களை எச்சரிக்கிறது. அவர் துக்கப்படுகையில் உங்கள் இருதயம் துக்கமடைகிறது, மேலும் நீங்கள் விரைவாக, “தேவனே, மன்னிப்பீராக” என்று ஜெபிப்பீர்கள். நீங்கள் புண்படுத்திய நபரிடம் விரைவில் மன்னிப்பு கேட்க விரும்புவீர்கள், மேலும் “என்னை மன்னிக்கவும். நான் உன்னை காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை,” என்று சொல்வது அவ்வளவு கடினமாக இருக்காது.
தேவனின் பார்வையில் தனக்கு தயவு கிடைத்தது என்று மோசே கூறியபோது (யாத்திராகமம் 33:12ஐப் பார்க்கவும்), தன் இருதயம் விரும்பும் எதையும் கேட்கலாம் என்று தேவன் தன்னிடம் கூறுகிறார் என்பதை மோசே புரிந்துகொண்டார்.
மோசே பதிலளிக்கையில், தேவனுடன் இன்னும் நெருக்கமாகப் பழக விரும்புவதாகக் கூறினார். மோசே, தேவன் செய்த வல்லமையான அற்புதங்களைக் கண்டார், ஆனால் அவர் மிகவும் விரும்பியது, கடவுளை நெருக்கமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதே.
தேவனை அறிந்துகொள்வது உங்கள் இருதயத்தின் விருப்பமாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் அவரை அறியலாம் மற்றும் அவருடைய சத்தத்தை நீங்கள் விரும்பும் படி தெளிவாகவும், அருகாமையிலும் கேட்கலாம். அவருடன் நேரத்தை செலவிடுவது மட்டுமே தேவை.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளிடம் பட்சபாதமில்லை, ஆனால் அவருக்கு நம்பிக்கையானவர்கள் இருக்கிறார்கள்.