பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக பரிந்து பேசுகிறார்

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். (ரோமர் 8:26)

பரிசுத்த ஆவியானவர் மட்டுமே கடவுளுடைய எண்ணங்களைத் துல்லியமாக அறிவார் என்று கடவுளுடைய வார்த்தை நமக்குக் கற்பிக்கிறது. அதனால் அவர் நமக்காகப் பரிந்து பேசி, நம்முடைய பரிந்துரைகளிலும், ஜெபங்களிலும் நம்மை வழிநடத்த வேண்டும்.

நீங்கள் செய்ய விரும்புகின்ற காரியங்களுக்காய், கடவுளின் சித்தத்தின் படி நாம் ஜெபிக்க வேண்டுமானால், கடவுள் என்ன நினைக்கிறார், என்ன விரும்புகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பல சமயங்களில், நாம் அந்த காரியங்களை உணர முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் செய்கிறார். எனவே அவர் நம் சார்பாக பரிந்து பேசுகிறார். நான் ஜெபத்தில் என்னால் இயன்றதைச் செய்கிறேன், ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்னுடைய ஜெப பங்குதாரர் என்பதையும் அவர் எனக்காக ஜெபிக்கிறார் என்பதையும் அறிந்து நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நாம் ஜெபித்து, கடவுளை நேசித்து, அவருடைய சித்தத்தை விரும்பும் வரை, நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அது நன்மைக்காகச் செயல்படும் என்று கடவுளை நம்பலாம் என்பதையும் கடவுளுடைய வார்த்தையின் மூலமே நாம் அறிவோம்.

இன்றைய வசனம், ரோமர் 8:26 மற்றும் ரோமர் 8:28 இப்படி சொல்கிறது: கடவுளை நேசிப்பவர்களுக்கும் [அவருடைய] வடிவமைப்பு மற்றும் நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் [கடவுள் நம்முடைய உழைப்பில் பங்குதாரர்] எல்லாமே, நன்மையாகவும் நன்றாகவும் செயல்படுகிறது, [திட்டத்திற்குப் பொருந்துகின்றன] என்பதை உறுதியாக நம்புகிறோம். ஜெபம் உட்பட எல்லாவற்றிலும் நமக்கு உதவ கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பியிருக்கிறார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதல். அவர் நன்மைக்காக, உழைக்க முடியாது என்ற சூழ்நிலை இல்லை. இன்று நீங்கள் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்யும்படி கேளுங்கள். நீங்கள் மிகவும் அதிகமாக வேதனைப்பட்டாலும், உங்களால் செய்யக்கூடியது புலம்புவது மட்டுமே. பரிசுத்த ஆவியானவர் அதை கடவுளிடம் துல்லியமாக வெளிப்படுத்தி உங்களுக்கு பதிலைக் கொண்டு வர முடியும். உங்களுக்கு ஒரு தெய்வீக உதவியாளர் இருக்கிறார். அவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார், எனவே அவரை அடிக்கடி அழைக்க மறக்காதீர்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக பரிபூரணமாக பரிந்து பேசுவார் என்று நீங்கள் நம்பலாம்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon