பரிசுத்த ஆவியானவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவார்

பரிசுத்த ஆவியானவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவார்

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் 16:13)

தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை, மக்களின் வாழ்வில் வேலை செய்ய அனுப்பும்போது, அவர் பாவத்தைக் கண்டித்து உணர்த்துகிறார், பாவிகளை அல்ல. அவருடைய வார்த்தை முழுவதிலும், தனிநபர்கள் மீதான அவரது அன்பு மற்றும் மக்களை வளரச் செய்வதற்கான அவரது விருப்பத்தின் தெளிவான ஆதாரத்தை நாம் காண்கிறோம், அதனால் அவர்கள் தங்கள் பாவத்தை விட்டு விட்டு, அவர்களின் வாழ்க்கைக்கான அவரது பெரிய திட்டங்களில் முன்னேற முடியும். நாம் என்ன தவறு செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் நமக்குக் காட்டவும், பேசவும் நாம் ஒருபோதும் பயப்படத் தேவையில்லை.

பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்கிறார். நம்மை வழிநடத்துவதும், கற்பிப்பதும், ஜெபத்தில் உதவுவதும், ஆறுதல்படுத்துவதும், பாவம் செய்ததாகக் குற்றஞ்சாட்டுவதும், நம் வாழ்வுக்கான கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதும் அவருடைய வேலை.

பரிசுத்த ஆவியானவரை நாம் நம்பலாம், ஏனென்றால் நம் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான சரியான நேரத்தையும் அவர் அறிந்திருக்கிறார். நான் உடைந்து விட்டேன், என்னை எப்படி “சரிசெய்வது” என்பது அவருக்குத் தெரியும் என்று நீங்கள் கூறலாம்.

பரிசுத்த ஆவியானவர் நம் அனைவரோடும் இருப்பது போல், உங்கள் வாழ்வின் பல பகுதிகளில் உங்களுடன் செயல்படுகிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கு முழுமையாக அடிபணியுமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன், ஏனென்றால் அவர் என்ன செய்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார், அதைச் சரியாகச் செய்வார். மக்கள் நம்மை சரி செய்ய முயற்சித்தால் அல்லது நம்மை நாமே சரிசெய்ய முயற்சித்தால், நாம் அவற்றை மோசமாக்குவோம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஆச்சரியமான வழிகளில் தனது அற்புதங்களை நிகழ்த்துகிறார். அவர் என்ன செய்கிறார் என்பதை நாம் எப்போதும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம் அல்லது விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இறுதி முடிவு நல்லதாக இருக்கும். இளைப்பாறுங்கள், ஒவ்வொரு நாளையும் அனுபவியுங்கள். அவர் உங்களில் செயல்படுகிறார் என்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: விட்டு விடுங்கள், தேவன் அதை உங்களுக்காக செய்யட்டும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon