ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. (கலாத்தியர் 3:14)
இந்தப் புத்தகத்தில், பரிசுத்த ஆவியைப் பற்றியும், ஆவியானவரால் நிரப்பப்படுவதைப் பற்றியும் நான் நிறைய எழுதியுள்ளேன். மேலும் நீங்கள் இந்த பக்கங்களைப் படிக்கும் போது, பரிசுத்த ஆவியை இந்த வழியில் அறிந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறேன்.
பரிசுத்த ஆவியானவர் நல்லவர். அவர், நீங்கள் அழைக்காமல், உங்கள் வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்த கட்டாயப்படுத்த மாட்டார். அவர் உங்களை நிரப்புவார். ஆனால் நீங்கள் அவரை அவ்வாறு செய்யும்படி கேட்டால் மட்டுமே. லூக்கா 11:13 ல், தம்மிடம் கேட்பவர்களுக்கு கடவுள் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார் என்று இயேசு வாக்குறுதி அளித்தார். மேலும் யாக்கோபு 4:2, நமக்கு சில விஷயங்கள் இல்லாததற்குக் காரணம் நாம் அவற்றைக் கேட்காததே என்று சொல்கிறது.
தைரியமாக தேவனுக்கு முன்பாகச் செல்லவும், அவர் உங்களை பரிசுத்த ஆவியால் நிரப்பும்படி தினமும் அவரிடம் கேட்கவும் உங்களை ஊக்குவிக்கிறேன். கிடைக்கும் என எதிர்பார்த்து கேளுங்கள். இருமனம் கொள்ளாதீர்கள் அல்லது சந்தேகம் உங்கள் இருதயத்தை நிரப்ப அனுமதிக்காதீர்கள். நம்பிக்கையுடன் கேளுங்கள். நீங்கள் பெறுவீர்கள் என்று நம்புங்கள். அவர் உங்களில் வாழ்கிறார் என்பதற்காய் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். பொய் சொல்வதற்கு கடவுள் ஒரு மனிதன் அல்ல (எண்ணாகமம் 23:19 பார்க்கவும்). எவரேனும் விசுவாசத்துடன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றும் போது, அவர் உண்மையுள்ளவர். எனவே உங்கள் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும்படி கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் (பார்க்க யோவான் 16:24).
ஆவியின் வாக்குத்தத்தத்தை விசுவாசத்தின் மூலமாகப் பெறுகிறோம் என்று இன்றைய வசனம் கூறுகிறது. பரிசுகளை யாரிடமும் பெற்றுக் கொள்ளும் படி கட்டாயப்படுத்த முடியாது; அவை வழங்குபவரால் வழங்கப்பட வேண்டும். பின்னர் அவை பெறுபவரால் பெறப்பட வேண்டும். கடவுள் தனது ஆவியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறார், எனவே நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் விசுவாசத்துடன், பெறுவது தான்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் படி கடவுளிடம் கேட்பதற்கும், தொடர்ந்து கேட்பதற்கும் வெட்கப்பட வேண்டாம்.