பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுதல்

“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” – அப்போஸ்தலர் 1:8

அப்போஸ்தலர் 1:8ல்  பரிசுத்த ஆவியானவர் நம்மீது வருவார் என்றும், அவர், நாம்,  உலக பரியந்தம் கிறிஸ்துவின் சாட்சிகளாக இருப்பதற்கான வல்லமையை தருவார் என்றும் கூறுகிறார்.

அநேக கிறிஸ்தவர்கள் எல்லாம் ‘சரி’ சட்டங்களை பின்பற்றுகின்றனர். ஆனால் இவ்வளவு தானா? என்று எண்ணுகின்றனர். ஒரு இளம் கிறிஸ்தவளாக அதே வெறுமையை நான் அனுபவித்தேன். சரியான காரியங்களை செய்வது தற்காலிகமான சந்தோசத்தை தந்ததே தவிர, ஆழமான திருப்தியளிக்கும் சந்தோசத்தை கொடுக்கவில்லை.

நான் ‘தேவனே ஏதோ குறைகிறது’ என்று கதறினேன். சில மணி நேரத்துக்கு பின் நான் ஆச்சரியம் அடைய தக்கதாக, இயேசு, நான் ஒருபோதும் அனுபவித்திராத வகையிலே பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் என்னை நிரப்பினார்…. பின்னர் எல்லாமே மாறிவிட்டது. நான் என் வாழ்விலே அவரது வல்லமையை புதிய விதத்திலே உணர்ந்தேன்.

நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் அனுதினமும் நேரம் செலவழித்து பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்ளும்போது, நீங்கள் வினோதமான, பயங்கரமான அனுபவித்துள்ளார் நுழைகிறதில்லை. நீங்கள் இன்னும் அதிகமாக இயேசுவைப் போன்று இருக்கவும், சாதாரணமான நிகழ்வுகளினூடேயும் அவரது ஞானத்திலே நடக்கவும் அவரது வல்லமையை பெற்றுக் கொள்கிறீர்கள்.

புதிய காரியங்களை பற்றி பயப்பட வேண்டாம். அவைகள் வேதத்தை சார்ந்ததாக இருக்கிறதா என்று மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியுடனான அனுதின உறவின் வல்லமையினாலே தேவன் உங்களை புதிய உயரங்களுக்கு கொண்டுசெல்ல விரும்புகிறார் என்பதை நம்புகிறேன். அவர் உங்களுடைய இருதய கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்.  விசாலமாக திறந்து அவரை வரவேற்பீர்களா?

ஜெபம்

தேவனே, உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நிரம்பியிருக்கும் ஒரு கிறிஸ்தவனாக வாழ விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் அந்த ஆழமான, திருப்திப்படுத்தும் சந்தோஷத்தில் எப்படி வாழ்வது என்பதை காண்பித்தருளும். அனுதினமும் எந்த சூழ்நிலையிலும் உம்முடைய நீதி, சமாதானம், சந்தோசத்தில் நடக்க நீர் அருளும் வல்லமைக்காகவும்,  ஞானத்திற்கும் நன்றி செலுத்துகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon