“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.” – பிலி 4:4
மனச்சோர்வு என்பது “வெறுமை; தாழ்ந்த நிலை; துக்க நிலை; மன வருத்தம்” என்பதாகும். மனச்சோர்வுக்கான ஒரு பொதுவான காரணம் நம் சூழ்நிலைகள் அல்லது நாம் இருக்கும் இடம் அல்லது நாம் எங்கு இருக்கிறோம் என்பது பற்றிய நமது அணுகுமுறை. அதனால்தான் பிசாசு நீங்கள் பயனற்றவர், நிராகரிக்கப்பட்டவர் போன்ற உணர்வை ஏற்படுத்த விரும்புகிறான்.
ஆனால், பிசாசு, அவன் செய்யும் செயல்களால் உங்களைக் கவர்ந்திழுக்க விடாவிட்டால், அவனால் உங்களை அடக்க முடியாது; அவன் உங்களை ஒடுக்க முடியாவிட்டால், அவனால் உங்களை, மன சோர்வடைய செய்ய முடியாது.
பிசாசை எதிர்த்து, மனச்சோர்வை வென்றெடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பரிசுத்த ஆவியானவர் உங்களை சந்தோசத்திற்குள்ளாக வழி நடத்தி செல்ல அனுமதிப்பதே என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதிர்மறையான கண்ணோட்டத்தில் கவனம் செலுத்தி பரிதாபமாக இருக்க வேண்டும் என்று சத்துரு விரும்புகிறான், ஆனால் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் நேர்மறையானதைப் பார்த்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறார்!
கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள் என்று பிலிப்பியர் 4:4 கூறுகிறது. நாம் தேவனை மையமாகக் கொண்டு, அவரிடம் சந்தோஷப்படும் போது, மனச்சோர்வுக்கு நம்மில் இடமில்லை. ஆகவே அடுத்த முறை எதிரி உங்களை தாழ்ந்தவனாகவோ சோகமாகவோ உணர வைக்க முயற்சிக்கும்போது, கர்த்தரிடத்தில் சந்தோஷப்படுவதைத் தேர்ந்தெடுங்கள்!
ஜெபம்
தேவனே, நீங்கள் அற்புதமானவர், ஆச்சரியமானவர், அதனால்தான் நான் எப்போதும் உம்மில் மகிழ்ச்சியடைய முடியும். நான் உம்மால் நிரம்பியிருப்பதால் மனச்சோர்வுக்கு என் வாழ்க்கையில் இடமில்லை!