
கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 2:16)
நாம் இயேசுவை, நம் இருதயங்களுக்குள் வரும்படி அழைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மில் அவருடைய வீட்டை உருவாக்குகிறார். நம் இருதயங்களின் அந்த நிலையிலிருந்து, பரிசுத்த ஆவியானவர் நம் ஆத்துமாவில் (நமது மனம், சித்தம் மற்றும் உணர்ச்சிகள்) ஒரு சுத்திகரிப்பு வேலையைத் தொடங்குகிறார்.
கடவுள் என்ன நினைக்கிறார் என்பதை அல்ல, நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நம் மனம் சொல்கிறது. அதை மாற்ற பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்படுகிறார். கடவுளுடன் எவ்வாறு உடன்படுவது, கடவுள் சிந்திக்கும் பாத்திரமாக இருப்பது எப்படி என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பழைய எண்ணங்கள் நம்மிடமிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டும். மேலும் புதிய எண்ணங்கள்-கடவுளிடமிருந்து வரும் எண்ணங்கள்-நம் சிந்தனையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
நம் உணர்ச்சிகள், நாம் எப்படி உணர்கிறோம் என்பதைச் சொல்கிறது. சூழ்நிலைகள், மக்கள் மற்றும் நாம் எடுக்கும் முடிவுகளைப் பற்றி கடவுள் எப்படி உணருகிறார் என்பதை அல்ல. சங்கீதம் 7:9-ன் படி, கடவுள் நம் உணர்ச்சிகளை சோதித்துப் பார்க்கிறார். நாம், மனித உணர்ச்சிகளால் மட்டும் அசைக்கப்படாமல், அவருடைய ஆவியால் அசைக்கப்படும் வரை அவர் நம்முடன் செயல்படுகிறார்.
நம் சித்தம் நமக்கு என்ன வேண்டும் என்று சொல்கிறது, கடவுள் விரும்புவதை அல்ல. விருப்பம், உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் விட மேலாக செயல்படுகிறது. சரியானதைச் செய்ய விரும்பாவிட்டாலும் அதைச் செய்ய சித்தத்தைப் பயன்படுத்தலாம். நமக்கு சுதந்திரமான விருப்பம் உள்ளது. கடவுள் நம்மை எதையும் செய்யும்படி கட்டாயப்படுத்த மாட்டார். நமக்கு நல்லது என்று அவர் அறிந்திருப்பதற்கு நேராய் அவருடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்துகிறார். ஆனால் இறுதி முடிவுகளை எடுப்பது நம்முடையது. நாம் தவறாமல் அவருடைய சித்தத்திற்கு இசைவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
நம் வாழ்வின் இந்த மூன்று பகுதிகளான மனம், சித்தம் மற்றும் உணர்ச்சிகள் – இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி மற்றும் பரிசுத்த ஆவியின் தலைமையின் கீழ் வருவதால், நாம் விசுவாசிகளாக அதிக முதிர்ச்சியடைவோம்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் உணர்ச்சிகள் உங்களை நிர்வகிக்க விடாமல் நீங்கள் அவற்றை நிர்வகிக்கலாம்.