“ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.” – பிர 4:12
ஒரு நல்ல திருமணத்தை விட சிறந்தது எதுவுமில்லை, ஒரு கெட்ட திருமணத்தை விட மோசமானது எதுவும் இல்லை. கிறிஸ்தவ திருமணங்கள் என்பது, தேவனுடைய சித்தத்தை அடைவதற்கு இரண்டு பேர் ஒரு வலுவான சக்தியாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு உயிருள்ள சான்றாக இருக்க வேண்டும் – இது நம் சந்தோசத்துக்காகவும், உலகத்தை ஈர்ப்பதற்காகவும் இருக்க வேண்டும்.
இருப்பினும், இரண்டு நபர்கள் ஒரு இணக்கமான திருமணத்தில் கலப்பது ஒரு செயல் முறையாகும். அது தானாக நடக்காது. நீங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது எவ்வளவு அன்பாக இருந்தாலும் ஒரு நல்ல திருமணம் தானாக நடப்பதில்லை. நீங்கள் தேவனை அதன் செயல் திட்டத்திற்கு அழைக்க வேண்டும்.
நாம் இயேசுவை அறிந்திருந்து, அவரை நம் திருமணத்திற்கு அழைக்கும்போது, நம்முடைய உறவு மூன்று இழைகளால் இழைக்கப் படுகிறது. கிறிஸ்து இருக்கும் போது அந்த ஆண்,பெண் ஐக்கியத்திலே மகா பெரிய பெலன் உண்டாகிறது.
திருமணத்தில் மகிழ்ச்சி என்பது நாம் விரும்பும் விதத்தில் எப்போதும் நடந்து கொள்ளும் ஒரு வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிப்பது அல்ல. அது இரண்டு பரிபூரணமற்றவர்கள் ஒரு பரிபூரண தேவனை நம்பி, அவருடைய சித்தத்திற்கும், நோக்கத்திற்கும் ஏற்ப இணங்குவதாகும். அந்த திருமணத்தைத் தான் தேவன் ஆசீர்வதிக்க முடியும்!
ஜெபம்
தேவனே, நான் என் வாழ்க்கைத் துணையை நேசிக்கிறேன், ஆனால் இரண்டு இழை போதுமானதன்று. நீர் எங்கள் திருமணத்திற்குள் வந்து ஒருவர் மேல் இருக்கும் எங்களுடைய அன்பை பெலப்படுத்தி, எங்களுக்கான உம்முடைய திட்டத்திற்குள்ளாக நீர் எங்களை வைக்கும் படி நான் உம்மை அழைக்கிறேன்.