“தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” – 2 தீமோ 1:7
நாம் ஒவ்வொரு நாளும் குன்றிப்போகத்தக்கதாக ஒரு பயத்தை நம்மீது திணிக்க பார்க்கிறான். நான் பயத்தை (ஆங்கில வார்த்தையாகிய பியர் என்ற சொல்லின் முதல் எழுத்தை எடுத்து) இவ்வாறாக கூறுவதுண்டு. “மெய்யைப் போன்று தோன்றும் பொய்யான அடையாளங்கள்”. தேவன் நாம் பெற்றுக் கொண்டிருக்க வேண்டிய வல்லமை, அன்பு, தெளிந்த மனம் போன்றவற்றை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிற செய்வதேயாகும்.
சில சமயங்களில் நாம் பயத்தை ஒரு விதமான உணர்ச்சி என்பதாக நினைக்கிறோம். ஆனால் உண்மையிலேயே அது ஒரு ஆவியாகும். உண்மையாகவே பயம் என்பது சாத்தானுக்கு மிகவும் விருப்பமான ஆயுதமாகும். கிறிஸ்தவர்களை அதைக் கொண்டு துன்புறுத்துவதை அவன் விரும்புகிறான்.
ஆனால் இயேசுவோ, விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று கூறுகிறார் (மார்க் 9:23) வேதத்தை விசுவாசித்து, ஆண்டவருக்கு அனலாகவும், பயமின்றியும் இருக்கும் கிறிஸ்தவன் தான், எதிரியின் மிக மோசமான பயமாகும்.
பயம் என்பது விசுவாசத்தின் எதிர்பதம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மைதான். நான் ஒரே நேரத்தில் பயத்திலும், விசுவாசத்திலும் வாழ இயலாது. பயம் நம்மை செயலிழக்க செய்து, தேவனுடைய வாக்குத்தத்தங்களை பெற்றுக் கொள்ளாதபடி செய்துவிடுகிறது. நாம் தேவனுக்கு கீழ்படிந்து, தேவன் நம்மை செய்யும்படி அழைத்ததை செய்யாதபடி அது நம்மை தடுக்கின்றது.
பயத்தை நேருக்குநேர் விசுவாசத்தின் வல்லமையால் எதிர்க்க வேண்டும். நாம் தேவனுடைய வார்த்தையை சொல்லி பயத்தை அகன்று செல்லும்படி கட்டளையிட வேண்டும். எனவே அடுத்த முறை பயம் உங்கள் கதவை தட்டும்போது விசுவாசத்தை திறக்கும்படி அனுப்புங்கள்!
ஜெபம்
தேவனே, நான் மெய்யைப் போன்று தோன்றும் பொய்யான அடையாளங்களை எதிர்கொள்ளும்போது என்னை எச்சரிப்பீராக. உம்முடைய உதவியோடு விசுவாசத்தின் வல்லமையில் நான் ஒவ்வொரு முறையும் பயத்தை ஓட ஓட விரட்டலாம் என்று அறிந்திருக்கிறேன்.