
“கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,” – ஏசாயா 61:1
இயேசு நம் காயங்களை சுகமாகவும், நம் உடைந்திருக்கும் இருதயங்களை கட்டவும், சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தையும், துக்கத்திற்கு பதிலாக சந்தோசத்தையும் கொடுக்க வந்தார் என்று வேதம் நமக்கு போதிக்கின்றது (ஏசா 61:1-3).
அநேக கிறிஸ்தவர்கள் இந்த பகுதியை படித்துவிட்டு, நம் சரீரப் பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய பிரகாரமான வியாதியிலிருந்து சுகமாக்க விரும்புகிறார் என்பதை அறிந்திருக்கின்றனர். ஆனால் அதைவிட அதிகம் இருக்கிறது. உண்மை என்னவென்றால் நம் உணர்ச்சிகள் நம் ஆளியலின் ஒரு பகுதியாகும். மற்ற பகுதியை போன்று அதுவும் நோயுற்று இருக்க முடியும்.
உணர்ச்சிகரமான வேதனையால் வருந்திக் கொண்டிருக்கும் அநேகர் இந்த உலகிலே இருக்கின்றனர். அதற்கான காரணம், அநேக சமயங்களில் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு, கைவிடப்படுதல், குறை கூறப்படுதல், ஏமாற்றங்கள், நியாயந்தீர்க்கப்படுதல், காட்டிக் கொடுக்கப்படுதல் மற்றும் பிற எதிர்மறை நடத்தைகளால் ஏற்படுகின்றது. இந்த உணர்வுரீதியான வேதனையானது, சரீரப்பிரகாரமான வேதனையை விட அதிக சேதம் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள், தாங்கள் அதை மறைத்து வைத்துக் கொண்டு, அது உண்மையில்லை என்பது போன்று நடிக்க வேண்டும் என்பதாக உணர்கின்றனர்.
உங்கள் வாழ்விலே ஏதோ ஒரு உணர்ச்சிபூர்வமான காயம் இருக்குமென்றாள், இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர் உங்கள் சரீர, ஆன்மீக வாழ்வில் மட்டும்தான் அக்கறை காட்டுகிறார் என்று தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். மனக்காயங்களை அவரிடம் எடுத்து செல்லுங்கள். நீங்கள் வருந்தும் ஒவ்வொரு பகுதியிலும் இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறார்!
ஜெபம்
தேவனே, உணர்ச்சிகள் உட்பட எல்லா பகுதியிலும் என்மேல் அக்கறையாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எனக்கிருக்கும் எல்லாவிதமான உணர்ச்சிபூர்வமான காயங்களையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். நீர் என்னை சுகமாக்கி என்னை மறுசீரமைக்க முடியும் என்று அறிந்திருக்கிறேன்.