வேத வார்த்தையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்

வேத வார்த்தையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்

“பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.” – 1 யோவாண் 2:14

வாழ்க்கையிலே வெற்றி இல்லாமல் எப்போது பார்த்தாலும் அடுத்தடுத்து பிரச்சினைகளையே சந்தித்துக் கொண்டிருப்பதைப் போன்றே காணப்படுவதின் காரணம் என்ன என்று நினைப்பீர்களேயென்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையிலே இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என்று அர்த்தம்.

அனேக விசுவாசிகள், ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் தேவ வார்த்தையை பிரசங்கிப்பதைக் கேட்பதற்கு ஆலயத்திற்கு செல்கின்றனர். ஆனால் அவர்களாகவே தேவ வார்த்தையை அறிந்திருக்க மாட்டார்கள். வெற்றியோடு வாழ விரும்புவீர்களேயென்றால், உங்கள் அனுதின வாழ்விலே தேவனுடைய வார்த்தைக்கு முன்னுரிமை கொடுங்கள். நடைமுறைக்கேற்ப சொல்ல வேண்டுமென்றால், காலையிலே ஆயத்தமாகும் போது, தேவனுடைய வார்த்தையை அறிக்கையிட வேண்டும், அல்லது வேலைக்கு செல்லும் போது போதனைகளையோ, ஆராதனை இன்னிசைகளையோ கேட்க வேண்டும்.

உங்களுடைய மதிய உணவு இடைவேளையை தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்காக செலவிடலாம் அல்லது வெளியே சென்று ஜெபிக்கலாம்.

உங்களுடைய வாழ்க்கையிலே தேவனுடைய வார்த்தையை இணைத்துக் கொள்ள சில வழி முறைகளை கண்டறியுங்கள். உங்களுக்கு எது தகுந்தது என்பதை அறிந்து அவரது சத்தியத்தை முறையாக தொடரும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தைக்கு உங்கள் வாழ்க்கையிலே முன்னுறிமையைக் கொடுப்பது உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.


ஜெபம்

தேவனே, உம்முடைய வார்த்தையை என் வாழ்க்கையோடு முழுவதும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். வாரம் ஒருமுறை ஒருவர் உம்முடைய வார்த்தையை பிரசங்கிப்பதை மட்டுமே கேட்க, அதை அறிந்து கொள்ள விரும்பவில்லை. தொடர்சியாக உம்முடைய வார்த்தையை தொடரும் வழிகளை எனக்கு காட்டுவீராக. என்னை நடத்துவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon