வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும். (1 கொரிந்தியர் 12:9)
குணப்படுத்தும் வரம் விசுவாசத்தின் வரத்துடன் வேலை செய்கிறது. எல்லா விசுவாசிகளும் நோயுற்றவர்களுக்காக ஜெபித்து, அவர்கள் குணமடைவதைக் காண ஊக்குவிக்கப்பட்டாலும் (பார்க்க மாற்கு 16:17-18), பரிசுத்த ஆவியானவர் சிலருக்கு மற்ற ஆவிக்குரிய வரங்களை வழங்குவது போல, சிலருக்குக் குணமாக்கும் அசாதாரண வரத்தைக் கொடுக்கிறார்.
எங்கள் மாநாடுகளில் நாங்கள் அடிக்கடி மக்களுக்காக ஜெபிக்கிறோம் மற்றும் பல அற்புதமான குணப்படுத்துதலைக் காண்கிறோம். பல ஆண்டுகளாக உறுதிப்படுத்தப்பட்ட உடல் நலம் பற்றிய சாட்சியங்கள் மற்றும் அறிக்கைகள் எங்களிடம் உள்ளது. எங்கள் மாநாடுகள் மற்றும் எங்கள் ஒளிபரப்புகளின் போது நான் விசுவாசத்தின் ஜெபத்தை ஜெபிக்கிறேன். கடவுள் வேலை செய்கிறார், என்று விசுவாசத்தால் நான் நம்புகிறேன்.
ஒரு நபர் ஆவிக்குறிய வரத்தின் மூலம் குணமடையும் போது, அந்த குணமடைதல் உடனடியாக வெளிப்படாது. குணப்படுத்துவது என்பது மருந்தைப் போலவே செயல்படும் ஒரு செயல்முறையாகும். விசுவாசத்தால் அதைப் பெறுவதும், அது செயல்படுவதாக நம்புவதும் அவசியம். முடிவுகள் பெரும்பாலும் பின்னர் தெரியும். “கடவுளின் குணப்படுத்தும் வல்லமை இப்போது உங்களில் வேலை செய்கிறது” என்று நான் அடிக்கடி மக்களிடம் சொல்லி அவர்களை ஊக்குவிக்கிறேன். நமது ஆரோக்கியத்தில் கடவுளை நம்ப வேண்டும். எனக்குத் தேவைப்படும் போது கிடைக்கும் மருத்துவர்கள் மற்றும் மருந்துகளுக்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், ஆனால் இயேசுவே நம்மைக் குணப்படுத்துபவர் (ஏசாயா 53:5 ஐப் பார்க்கவும்).
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்கள் மருத்துவர். அவருடைய வார்த்தையே உங்கள் மருந்து. உங்களை எல்லா வழிகளிலும் குணப்படுத்தும்படி அவரிடம் கேளுங்கள்.