லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். – ஆதி 13:14
நாம் புதிய தொடக்கத்தை கொண்டு இருக்கவேண்டிய இடத்திற்கு நம் வாழ்க்கை நம்மை கொண்டு வருவது போல தோன்றுகிறது. வேதாகமத்தில், லோத்து சிறந்த இடத்தை தெரிந்துகொண்டு ஆபிரகாமுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லாத இடத்தை விட்டபோதும், ஆபிரகாம் அத்தகையதொரு இடத்தில் இருந்தார். ஆனால் தேவன் ஆபிரகாமை விட்டு விடவில்லை. மாறாக, அவர் ஆபிரகாமுக்கு ஒரு புதிய தரிசனத்தை கொடுத்தார்.
ஆபிரகாமும், லோத்தும் பிரிந்த பின் தேவன் ஆபிரகாமுக்கு சொல்லியது எனக்கு பிடித்திருக்கிறது. அவர் ‘உன் கண்களை ஏறெடுத்து நீ இருக்கும் இடத்திலிருந்து பார்’ என்றார். நீ இருக்கும் இடத்தில் இருந்து பார் என்ற பதம் தான் என்னை தூண்டி விடுகிறது. அதுதான் ஒரு புதிய தொடக்கத்திற்கான இடம். தேவன் தாமே நம்மை அந்த இடத்திற்கு அவ்வப்போது கொண்டுவருவார்.
தற்போது நீங்கள் அவ்விடத்திலேயே இருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு தவறான பழக்கத்தை உடைத்தெறிய விரும்பலாம். அல்லது தொலைந்துபோன கணவை உயிர்ப்பிக்க முயற்சி செய்யலாம். ஒருவேளை உங்கள் பொருளாதாரத்தை கையிலெடுக்க விரும்பலாம். உங்கள் சொந்த வியாபாரத்தை தொடங்கலாம். ஒரு புத்தகத்தை எழுதலாம். இதுபோல, எதுவாக இருந்தாலும் நீங்கள் இப்போதே தொடங்க வேண்டும் என்று தேவனிடம் சொல்லிக்கொண்டு இருக்கலாம். இதுவே உங்களுடைய புதிய தொடக்கமாக இருக்கலாம்!
தேவன், ஆபிரகாமை அவன் இருந்த இடத்தில் இருந்து பார்க்க சொன்ன பின்னர் அவனிடம் சொன்ன அடுத்த காரியம் “நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.” – ஆதியாகமம் 13:17
நீங்கள் எழுந்து உங்களுடைய தரிசனம், கணவை தொடங்குங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம்…. ஏனென்றால் அவர் அதை உங்களுக்கு கொடுக்கிறார். உங்கள் பங்கு அதைச் செய்வதுதான்.
நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். அது ஒருவேளை சுலபமானதாக இல்லாமலிருக்கலாம். கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தேவனை நம்பி அது எதுவாக இருப்பினும் அதை தொடருங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து பார்த்து சொல்லுங்கள்!
ஜெபம்
தேவனே, கடந்த காலத்திலே என்ன நடந்திருந்தாலும், இப்போது நான் எங்கே இருக்கிறேனோ அங்கிருந்து ஏறிட்டுப் பார்க்க எனக்கு உதவும். எனக்கு நீர் கொடுத்திருக்கும் புதிய தொடக்கத்திற்கு உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் தைரியமாக சென்று என்னை நீர் அழைத்ததை செய்கிறேன்.