பரிசுத்த ஆவியானவர் உறவுகளைப் பற்றி அக்கறை கொள்கிறார்

பரிசுத்த ஆவியானவர் உறவுகளைப் பற்றி அக்கறை கொள்கிறார்

அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். (எபேசியர் 4:30)

இன்றைய வேதாகம வசனம், அதைச் சுற்றியுள்ள வசனங்களின் பின்னணியில், உறவுகளை நாம் கையாளும் விதம் கடவுளுக்கு முக்கியமானது என்று நமக்குக் கற்பிக்கிறது. அவர்களை மோசமாகக் கையாள்வது பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தும் ஒரு செயலாகும்.

பல நேரங்களில் நமக்கு நெருக்கமானவர்களை தவறாக நடத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறோம். குறிப்பாக நமக்கு உடல்நிலை சரியில்லாத போது; போதுமான தூக்கம் வரவில்லையெனில்; ஒரு கடினமான நாள், கெட்ட செய்தி கிடைக்கும் போது, அல்லது ஒரு ஏமாற்றத்தை உணரும் போது. ஆனால் நாம் எப்போதும் ஒருவரையொருவர் நன்றாக நடத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். நாம் அவ்வாறு செய்ய நினைக்கும் போது மட்டும் அல்ல.

நான் என் கணவர் அல்லது குழந்தைகளுடன் மோசமாக நடந்து கொள்வேன். ஆனால் பின்னர் மற்றவர்களுடன் ஏன் மோசமாக நடந்து கொண்டேன் என்று என்னையே கேட்டுக் கொள்வேன். நான் ஈர்க்க விரும்பும் நபர்களுடன் இருக்கும்போது எனது எதிர்மறை உணர்ச்சிகளையும், மனப்பான்மையையும் கட்டுப்படுத்தினேன் என்பதை பரிசுத்த ஆவியானவர் விரைவாக எனக்குக் காட்டினார். ஆனால் நான் ஏற்கனவே உறவு வைத்திருந்த எனது சொந்தக் குடும்பத்துடன் இருந்த போது, எனது குணாதிசயக் குறைபாடுகளையும், ஆவிக்குறிய முதிர்ச்சியற்ற தன்மையையும் தெளிவாகக் காட்டும் சுதந்திரத்தை நான் பெற்றிருந்தேன். நான் உண்மையில் எனக்கு உதவ முடியாது என்பதில் உறுதியாக இருந்தேன். நான் வருத்தமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கும் போது, என்னால் என்னை ஒழுங்குபடுத்த முடியவில்லை. நான் மிகவும் விரக்தியடைந்தேன். எனக்கு வெடிகுண்டைப் போல் வெடித்து விட வேண்டும் என்று தோன்றியது.

பணப் பிரச்சனைகள், வேலையில் ஏதாவது, அல்லது வீட்டில் சில முக்கியமற்ற விஷயங்களால் நான் வருத்தமடைந்த போது, எனது விரக்தியை என் குடும்பத்தின் மீது எடுத்துச் சென்றேன். பெரும்பாலான நேரங்களில் நான் கோபமடைந்தேன். எனக்குள் தீர்க்கப்படாத ஏதோவொன்றின் காரணமாக அவர்களை மோசமாக நடத்தினேன், என்ன நடந்தது என்பதற்காக அல்ல. உண்மையை எதிர்கொள்ள கடவுள் எனக்கு உதவினார், அதிர்ஷ்டவசமாக நான் விடுவிக்கப்பட்டேன்.

உறவுகள் நமது மிகப்பெரிய சொத்துக்களில் சில. அவற்றை நாம் மதிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அவர் நமக்குக் காண்பிக்கும் எந்த உண்மையையும் எதிர்கொள்ளத் தயாராக, திறந்த இருதயத்துடன் அவரிடம் சென்றால், நம்முடைய ஏமாற்றங்களைச் சரியாகக் கையாள பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவார்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் உள் மன உளைச்சலுக்கு மற்றவர்கள் விலை கொடுக்க வேண்டாம்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon