
“உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.” – ரோமர் 12:14
கடந்தகால காயங்களை பொறுத்தவரை, கடினமாக இருப்பினும் மன்னிப்பது தான் சரி என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆயினும் நம்மில் சிலர் தேவன் நாம் எடுக்க விரும்பும் அந்த படியை அரிதாகவே செய்கின்றோம்.
ஒரு பொதுவான கருத்து வேறுபாடு என்னவென்றால், நாம் செய்யவேண்டியதெல்லாம் மன்னிக்க தீர்மானிக்க வேண்டும். அதோடு நம் பணி முடிவு பெறுகிறது. ஆனால் இயேசு, ஆசீர்வதியுங்கள். உங்களை சபித்தவர்களின் சந்தோசத்திற்காக ஜெபியுங்கள் என்றும் கூறுகிறார். பின் ரோமர் 12:14ல், நம்மை துன்பப்படுத்தி, நம்மை கொடூரமாக நடத்துபவர்களை நாம் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் பார்க்கிறோம்.
நாம் நம் எதிரிகளை நிச்சயமாக ஆசீர்வதிக்க வேண்டும். தகுதியற்றவர்கள் மேல் நாம் இறக்கம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக தேவன் நம்மை அழைத்து இருக்கிறார். ஏன்?
நீங்கள் மன்னிக்கும் போது, தேவன் உங்களை குணமாக்க அது கதவை திறந்து விடுகிறது. ஆனால் உண்மையிலேயே உங்களை காயப்படுத்தியவர்களுக்கு அது எதுவும் செய்வதில்லை. ஆனால் நீங்கள் அவர்களை ஆசீர்வதிக்கும் போது, தேவன் அவர்களுக்கு சத்தியத்தை காட்டும்படி கேட்கின்றீர்கள். அதனால் அவர்கள் மனந்திரும்பி, அவர் அளிக்கும் உண்மையான விடுதலையை அனுபவிப்பார்கள். மன்னிப்பது உங்களை விடுதலை ஆக்குகிறது…. உங்கள் எதிரிகளை ஆசீர்வதிப்பது அவர்களை விடுதலை ஆக்குகிறது.
ஜெபம்
தேவனே, எனக்கு உதவியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் அங்கே தானே நின்று விட நான் விரும்பவில்லை. என்னை காயப்படுத்தியவர்களை ஆசீர்வதியும் என்று கேட்கின்றேன். என்னுடைய வாழ்வில் எனக்கு சுகத்தை கொண்டு வந்தது போலவே அவர்களுக்கும் சுகத்தை கொண்டு வாரும். அதனால் அவர்கள் உம்முடைய நன்மையை அனுபவித்து அன்பிலே நடக்கட்டும்.