உங்கள் கனவை காண தொடங்குங்கள்

உங்கள் கனவை காண தொடங்குங்கள்

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். – நீதிமொழிகள் 29:18

தேவன் உங்கள் இருதயத்தில் வைத்திருக்கும் கனவு என்ன? உங்களுக்கு ஏதாவது கனவு இருக்கின்றதா என்று நான் கேட்கவில்லை. இருக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஏனென்றால் தேவன் நம் அனைவருக்கும் கனவுகளை கொடுக்கின்றார்.

நான், மக்கள் தங்கள் கனவுகளை பல விதத்திலே கையாள்வதை பார்த்திருக்கிறேன். சிலர் பிறருடைய குற்றச்சாட்டுகளில் இருந்து அவற்றை பாதுகாக்க தங்கள் இருதயங்களின் ஆழத்திலே அவற்றை புதைத்து விடுகின்றன. சிலர் அவற்றை தங்கள் பார்வைக்கு புறம்பாக்கி விடுகின்றனர். அதனால் அவர்கள் அவற்றைப் பற்றி இனியும் நினைக்க வேண்டி இருப்பதில்லை. சிலர் அவற்றை பிடித்துக் கொண்டே இருப்பது அதிக கடினமானதாக இருப்பதால், இறுதியாக அவர்கள் கனவு காண்பதையே விட்டு விடுகின்றனர்.

உங்கள் கனவுகள் மீண்டுமாக தொடங்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு காரியங்கள் உண்டு. முதலாவதாக, தெளிவான ஒரு தரிசனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, உங்கள் தரிசனத்தை எப்போதுமே உங்கள் முன்னே வைத்திருக்க வேண்டும்.

ஒரு தரிசனத்தை பெற்று இருப்பதால் அது உடனேயே நடந்துவிடும் என்று அர்த்தமாகாது. தேவன் ஒரு தரிசனத்தின் முடிவைப் பற்றி எவ்வளவு ஆர்வம் உள்ளவராக இருக்கிறாரோ, அப்படியாகவே அதன் செயல்பாட்டிலும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார்.

அப்போஸ்தலர் பவுல் பிலிப்பியர் 4:11-13 லே, தான் எந்த நிலையில் இருந்தாலும் மன ரம்மியமாகவும், திருப்தியாகவும் இருக்க கற்றுக் கொண்டதாக கூறுகிறார். வேறு விதமாக சொல்ல வேண்டும் என்றால், அவர் அந்த தருணத்தில் எங்கே இருந்தாலும் வருத்தமடைய தன்னை அனுமதிக்கவில்லை. அவர் தான் எங்கே இருக்கக்கூடும் என்பதையே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்படி என்றால், நீங்களும் பவுலைப் போன்று மனநிறைவுக்கும், லட்சியத்துக்கும் இடையே ஒரு சமநிலையை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான பதில் இதோ: நீங்கள் எங்கே சென்று கொண்டு இருக்கிறீர்களோ அங்கே சென்று கொண்டிருக்கும் வழியில் அந்த பயணத்தை அனுபவிக்க கற்றுக் கொள்வதே ஆகும்.

உங்களுக்கு ஒரு கனவு, தரிசனம் இருக்குமென்றால் அதை நீங்கள் உங்களுக்கு முன்னே வைக்க வேண்டும். எழுதி வைப்பது உதவும் என்றால், எழுதி வையுங்கள். தேவன், உங்களுக்கு கொடுத்திருக்கும் கணவை ஒவ்வொரு அடியாக, ஒரு நேரத்தில் ஒன்றாக வாழ உங்களுக்கு உதவுவார்.


ஜெபம்

இயேசுவே, எப்போதுமே நான் அப்படி உணராவிட்டாலும், நான் வாழும் வாழ்க்கையானது அதை விட்டு விட செய்கிறது. என் வாழ்க்கைக்கென்று, பெரிய திட்டத்தை நீர் கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். நான் என்னுடைய சூழ்னிலைகளை நம்புவதை விட, நீர் எனக்கு கொடுத்திருக்கும் கனவை நான் வாழ, உம்மை அதிகமாக நம்ப தெரிந்து கொள்கிறேன்

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon