“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” – பிலிப்பியர் 4:13
பிலிப்பியர் 4:13 மிகவும் பிரபலமான வேத வாக்கியமாகும். அது அனேக சமயங்களில் தவறாக உபயோகிக்கப்படுகிறது. அது சொல்வது ‘என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு’. அப்படி என்றால் நீங்கள் செய்ய தீர்மானிக்கும் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யலாம் என்று அர்த்தமாகாது. பவுல், தான் எப்படி கிறிஸ்துவின் பெலத்தால் அவரது சூழ்நிலைகள் எதுவாக இருப்பினும் மனநிறைவுடன் இருக்க இயலுகிறது என்பதை குறிப்பிட்டு பேசுகிறார்.
தேவனுடைய கிருபையினாலே நம் வாழ்விலே நாம் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்யலாம் என்று நான் நம்புகிறேன். அத்தகையதொரு மனநிலையை தான் நாம் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் தேவனை நம்புவீர்கள் என்றால் உங்களால் செய்ய இயலாது எதுவும் இராது. நம் பாதையிலே குறிக்கிடும் எல்லாவற்றையும் நம்மால் சமாளிக்க இயலும். ஏனென்றால் நம்மால் தாங்கிக்கொள்ள இயன்ற தற்கும் மேலாக எதையும் அவர் நம்மீது போடுகிறது இல்லை என்று தேவன் வாக்களிக்கிறார்.
ஆகவே இப்போது நீங்கள் எங்கே இருந்தாலும், உங்கள் வாழ்விலே என்ன நடந்து கொண்டிருந்தாலும் ஒரு நேர்மறையான மனப்பான்மையை கொண்டிருங்கள். தேவன் உங்கள் பட்சமாக இருப்பதால் களிகூறுங்கள். உங்களால் செய்ய இயலாத காரியங்களைப் பற்றி மனம் சோர்ந்து போவதை நிறுத்துங்கள்.
தேவன், உங்களுக்காக தனிப்பட்ட முறையில் உங்கள் வாழ்க்கைக்கு என்று ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்று அறிந்திருக்கவும், அந்த தன்னிகரற்ற திட்டத்தை ஏற்றுக்கொள்ளவும், உங்கள் திட்டத்தை வேறொருவருடன் ஒப்பிட்டுக் கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். உங்களைவிட, தேவன் உங்களுக்கு என்ன தேவை, எதை உங்களால் சமாளிக்க இயலும் என்று அதிகமாக அறிந்திருக்கிறார் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். உங்களை நீங்கள் அறிந்து இருப்பதைவிட அவர் உங்களை அதிகமாக அறிந்திருக்கிறார்!
ஜெபம்
ஆண்டவரே, பவுலைப் போன்று என் மனநிறைவு என் சூழ்னிலைகளிலிருந்தல்ல அது உம்மிடமிருந்து வர வேண்டுமென்று விரும்புகிறேன். நீர் எனக்காக கொண்டிருக்கும் திட்டம் பரிபூரணமானது என்றும் நான் கவலைப்பட அவசியம் இல்லை என்றும் அனுதினமும் எனக்கு காண்பித்தருள்வீராக.