“கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” – சங்கீதம் 27:1
உங்கள் எண்ணங்களை அச்சத்தால் வெல்ல அனுமதித்தால், தேவன் கொடுத்திருக்கும் முடிவை அடைய முடியாது. அச்சம் என்பது பயத்தின் நெருங்கிய உறவினர். அதை உங்கள் மனதில் நிலைத்திருக்க அனுமதிப்பது, உங்களை துயரத்திற்குள்ளாக்கி, உங்கள் மகிழ்ச்சியை திருடி விடும்.
இந்தியாவில் ஒரு மாநாட்டை நடத்த எங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அங்குள்ள அற்புதமான வாய்ப்பைப்பற்றி நான் உற்சாகமாக இருந்தேன், ஆனால், நீண்ட விமான பயணம் மற்றும் அங்கு நிலவும் மோசமான நிலைமைகள் மட்டுமே என் கவனத்திற்கு வந்தது. ஆனால் கர்த்தர் என் இருதயத்தோடு பேசினார், நான் அவருடைய வார்த்தையில் கவனம் செலுத்துவதன் மூலமும், அதில் நிலைத்திருப்பதின் மூலமும் நான் அச்சத்தை வெல்ல வேண்டும் என்பதைக் காட்டினார். பிரயாணத்தின் எதிர்மறையான காரியங்களில் நான் வாழ அனுமதித்திருந்தால், அது நான் அனுபவிக்க கடவுள் விரும்பிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அகற்றிவிடும்.
பயம் ஒரு கண்ணி, அதில் விழக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். பயம் மற்றும் பயத்தைக் கொண்டு வர முயற்சிக்கும் காரியங்கள் வரும்போது, எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது புதிய சூழ்நிலைகள் அல்லது சவால்களை எதிர்கொள்வது போன்ற காரியங்கள் வரும் பொழுது உங்கள் இருதயத்தை, சங்கீதம் 27:1 க்கு திருப்பி, “கர்த்தர் என் ஒளி, என் இரட்சிப்பு நான் யாரை அஞ்சுவேன் அல்லது பயப்படுவேன்?” என்று உரத்த சத்தமாய் வாசியுங்கள்.
ஜெபம்
ஆண்டவரே, நீரே என் ஒளி, என் இரட்சிப்பு என்று இன்று அறிவிக்கிறேன். உம் நிமித்தமாய், வாழ்க்கையில் நான் எதையும் குறித்து பயப்படத் தேவையில்லை. உம்மில் எனக்கு வெற்றி உண்டு.