
“தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.” – 1 யோவாண் 4:16
1 யோவாண் 4:16 வலியுறுத்தி சொல்வது என்னவென்றால், தேவன் நம்மீது கொண்டிருக்கும் அன்பைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். ‘தேவன் என்னை நேசிக்கிறார்’ என்று நாம், ஏன் சொல்லுகிறோம் என்பதை உணராமலேயே சொல்வது சுலபமானதே. அவரது அன்பைப் பற்றிய அறிவானது நம் மனதளவில் புரிந்து கொண்டிருக்கும் வேதாகம உண்மையாக மட்டும் இராமல், நம் வாழ்விலே அது ஒரு ஜீவனுள்ள உண்மையாக இருக்க வேண்டும்.
இந்த வசனம் சொல்வது என்னவென்றால், ‘தேவன் அன்பாயிருக்கிறார், அன்பிலே தொடர்ந்து வாசம் செய்பவன், தேவனிலே தொடர்ந்திருக்கிறான், தேவனும் தொடர்ந்து அவனிலே வாசம் செய்கிறார்’.
இந்த வசனத்தில் ‘வாசம் பண்ணுகிறார்’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால் ‘நிலைத்திருத்தல், வாழ்தல்/ஜீவித்தல்’ என்பதாகும். அது அவ்வப்போது வந்து விட்டுப் போவதைக் குறிக்காமல், நிலைத்திருத்தல், தங்கியிருத்தல் என்பதைக் குறிக்கிறது.
தேவனுடைய அன்பானது, நாம் மனம் அறிந்திருக்க வேண்டிய உண்மையாகவோ அல்லது கடந்து செல்கின்ற உணர்வாகவோ இருக்கிறதில்லை. அவருடைய அன்பு நிலைத்திருக்கிறது. காரியங்களெல்லாம் நன்றாக இருக்கும் சமயத்தில் மட்டும் நிலைத்திருந்து, மற்ற சமயங்களில் விட்டு விட்டுப் போகிறதில்லை. தேவனுடைய அன்பு எப்போதுமே நம்மில் நிலைத்திருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய அன்பிற்குள்ளாக நெருங்கி செல்லும் போது, கிறிஸ்துவுக்குள்ளாக முதிர்ச்சியை கற்றுக் கொள்வோம். தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் அற்புதமான அன்பிலே நிலைத்திருக்கும் போது கடினமான சமயங்களிலே வளர்வீர்கள்.
ஜெபம்
தேவனே, நீர் எனக்காக கொண்டிருக்கும் அன்பிலே நான் நிலைத்திருக்க இன்று தீர்மாணிக்கிறேன். காரியங்கள் மாறலாம், ஆனால் உம்முடைய அன்போ எப்போதும் கைவிடாது. எனவே உம்முடைய ஆச்சரியமான, அற்புதமான அன்பிலே ஊன்றப்பட்டிருப்பதை தெரிந்து கொள்கிறேன்.