அவருடைய பிரசன்னத்தை உங்கள் அனுதின வாழ்வில் அனுபவிப்பது எப்படி

அவருடைய பிரசன்னத்தை உங்கள் அனுதின வாழ்வில் அனுபவிப்பது எப்படி

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். – யோவான் 14:23

வாழ்க்கையானது அலுவல் நிறைந்ததாய், கவனச் சிதறல்கள் நிறைந்ததாய் இருக்கின்றது. நாம் நம்முடைய கவலைகளிலும், வேலைகளிலும், பிற வேலைகளிலும் அதிகமாக பிடிக்கப்பட்டு இருப்பதால் எது அதிகம் தேவையோ அதைக் குறித்த கண்ணோட்டத்தை இழந்து விடுகின்றோம்.

லூக்கா 2-ம் அதிகாரத்தின் முடிவிலே சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது. அது, இயேசு 12 வயதாக இருக்கும்போது யோசேப்பும், மரியாளும் அவரை பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்கு அழைத்துச் செல்கின்றனர். பண்டிகை முடிந்தபின் இயேசு அவர்களோடு இருக்கிறார் என்று நினைத்து அவர்கள் வீடு திரும்பினர்.

எத்தனை முறை நாம் நம்முடைய சொந்த காரியங்களை செய்ய அலைந்து கொண்டிருந்து, தேவன் நம்முடன் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு இருந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இங்கேதான் சுவாரஸ்யம் இருக்கின்றது. இயேசு தங்களுடன் இல்லை என்பதை உணர்ந்தபோது, மரியாளும், யோசேப்பும் ஒருநாள் பிரயாணத்தை முடித்திருந்தனர். பின்னர் அவரை கண்டுபிடிக்க மூன்று மூன்று நாட்கள் பிடித்தது. மூன்று நாட்கள்! இதில் இருக்கும் செய்தி என்னவென்றால், தேவனுடைய அந்த விசேஷித்த பிரசன்னத்தை இழப்பது, ஒருமுறை இழந்தபின் அதை பெற்றுக் கொள்வதை விட மிகவும் எளிது என்பதே.

நாம் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படி நாம் செய்யும் போது தேவனை நம் இருதயங்களில் சுகமாய் இருக்க செய்கிறோம்.

இது அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து இருப்பதில் தொடங்குகிறது. தேவனை புண்படுத்தும் நடக்கையில் இருந்து நம்மை விலக்கிக் கொள்ளும் அர்பணமே ஆவிக்குரிய முதிர்ச்சியின் முதல் அடையாளமாகும். அவர் என்ன நினைக்கிறாரோ அதற்கு நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அது காட்டுகிறது.

அப்படி என்றால் நீங்கள் பிறரிடம் தாராளமாக இருப்பதை தெரிந்து கொள்கிறீர்கள், மன்னிக்க கற்றுக் கொள்கிறீர்கள், உங்கள் மனக்காயங்களை விட்டு விடுகின்றீர்கள், சமாதானத்தோடு வாழ்கின்றீர்கள். நாம் நம் வார்த்தைகளை நோக்கத்துடன் தெரிந்து கொள்ளும் போது, தேவனுக்கு நன்றி செலுத்தும் போது, பிறரை உயர்த்தும் போது நாம் தேவனுடன் நாள் முழுவதும் தொடர்பில் இருக்கின்றோம்.


ஜெபம்

பிதாவே, என்னுடைய இருதயத்தை உம்முடைய வீடாக்கிக் கொண்டதற்காக நன்றி. தேவனே இன்று எனக்கு உம்முடைய பிரசன்னம் தேவை. நான் உம்மை என் நினைவுகளாலும், வார்த்தைகளாலும் கணப்படுத்தவும், என்னை சுற்றிலும் உள்ளவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கவும் எனக்கு உதவுவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon